Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news ராமர் தீர்த்தம் தூர்வாரும் பணி ... ஐப்பசி முதல் ஞாயிறு: ஆஞ்சநேயருக்கு பூஜை ஐப்பசி முதல் ஞாயிறு: ஆஞ்சநேயருக்கு ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
சித்திரக் கதையில் ராமாயணம்! : சிறப்பு தபால்தலை வெளியீடு
எழுத்தின் அளவு:
சித்திரக் கதையில் ராமாயணம்! : சிறப்பு தபால்தலை வெளியீடு

பதிவு செய்த நாள்

23 அக்
2017
12:10

கோவை: இரவு நேர படுக்கைக்கு முன் பாட்டிமார்களின் கதைகளைக் கேட்டு வளர்ந்தவர்கள் நாம். அதில் தவறாமல் இடம்பெறும் ராமாயணக் கதைகளில், ஆஞ்சநேயரின் விந்தைகளையும், அற்புதங்களையும் கேட்டு வியக்காத நாளில்லை. ராமன், சீதையின் வாழ்க்கையையும், துயரங்களையும், எத்தனையோ பேர் எவ்வளவோ விதங்களில் எழுதியுள்ளனர். சீதையின் பார்வையில் ராமாயணம், ராவணனின் கண்ணோட்டத்தில் ராமாயணம் என எத்தனையோ வழிகளில் ராமாயணத்தை படித்தும், கேட்டும் வந்த நமக்கு, வித்தியாசமான சித்திரக்கதை வடிவில், எளிய ஓவியத்தில் ராமாயணத்தை சொல்லியிருக்கிறது தபால்துறை.

பாரம்பரியம், வரலாற்று நிகழ்வுகள், தலைவர்கள், பண்பாடு, கலாசாரம் ரீதியான விஷயங்களுக்கு சிறப்பிக்கும் வகையில் அரிய நினைவு தபால் தலைகளை வெளியிட்டு வரும் தபால்துறை, முதல் முறையாக புராணக் கதைகளுக்குமுக்கியத்துவம் தரும் வகையில், ’ராமாயணத்தை’ மையமாகக் கொண்டு அரிய தபால்தலைகளை வெளியிட்டுள்ளது. ராமாயணக்கதையில் வரும் சிறப்புமிக்க காட்சிகளை அழகோவியமாக தீட்டப்பட்ட விதம் பாராட்டுக்குரியது. மொத்தம், 11 சிறப்பு தபால்தலைகளும், ஒரு சிறப்பு தபால் உறையும் வெளியிடப்பட்டுள்ளது. தபால்துறை அதிகாரி ஒருவர் கூறுகையில், ’புராணக் கதைகளுக்கு தபால்தலை வெளியிடுவது இதுவே முதல் முறை. இதை விட எளிய வடிவில் படங்கள் வாயிலாக கதைச்சுருக்கத்தை சொல்ல முடியாது. ராமாயணத்தை தபால்தலைகள் மூலமே எளிதில் குழந்தைகளுக்கு சொல்லிவிடலாம். இது அனைத்து தபால் தலை சேகரிப்பு நிலையங்களிலும் விற்பனையாகின்றன. ஒரு தபால்தலையின் விலை ரூ.5 மட்டுமே’ என்றார்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
பழநி: பழநி முருகன் கோயில் பங்குனி உத்திர விழா இன்று (ஏப்.4ல்) திருஊடல் நடந்து கொடி இறக்கத்துடன் விழா ... மேலும்
 
temple news
திருவண்ணாமலை: திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவில் திருக்கல்யாணம் உற்சவம் முன்னிட்டு, திருக்கல்யாண ... மேலும்
 
temple news
திருப்பரங்குன்றம்: திருப்பரங்குன்றம் கோயிலில் சுப்பிரமணிய சுவாமி, தெய்வானைக்கு திருக்கல்யாணம் அம்மி ... மேலும்
 
temple news
மும்பை: ஸ்ரீ காஞ்சி காமகோடி பீடாதிபதி ஜகத்குரு பூஜ்யஸ்ரீ சங்கர விஜயேந்திர சரஸ்வதி சங்கராச்சாரியார் ... மேலும்
 
temple news
ஸ்ரீரங்கம் : ஸ்ரீரங்கம் அரங்கநாத சுவாமி கோயிலின் உபகோயிலான திருவெள்ளறை புண்டரீகாட்ச பெருமாள் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar