பதிவு செய்த நாள்
25
அக்
2017
10:10
காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் குமரகோட்டம், கந்த சஷ்டியில், ஐந்தாம் நாள் உற்சவமான நேற்று, சூரர்கள் திக்விஜயம் என, அழைக்கப்படும், காவல் பலப்படுத்தும் நிகழ்ச்சி நடந்தது. காஞ்சிபுரம் குமர கோட்டம், சுப்பிரமணியசுவாமி கோவிலில், 20ம் தேதி, கந்த சஷ்டி விழா கொடியேற்றத்துடன் துவங்கியது. அன்று முதல் தினமும், காலை பல்லக்கிலும், மாலை, வெவ்வேறு வாகனங்களில், சுவாமி வீதியுலா வந்தார். ஐந்தாம் நாள் உற்சவமான நேற்று, சூரபத்மன், சிங்க முகசூரன், பானுகோபன், இரண்யன் ஆகிய நான்கு பேரும், திக்விஜயம் என அழைக்கப்படும், காவல் பலப்படுத்தும் ஊர்வலம் நேற்று மாலை நடந்தது.இந்த ஊர்வலம், எஸ்.வி.என்., பிள்ளை தெருவில் துவங்கி, இந்திரா சாலை, காமராஜர் வீதி, மடம் தெரு வழியாக பிள்ளையார்பாளையம் சென்று, இரவு குமரகோட்டம் வந்தடைந்தது. அங்கு பானுகோபனை சம்ஹாரம் செய்யும் நிகழ்வு நடந்தது. இன்று, இரவு, சூரசம்ஹாரம் நடைபெற உள்ளது. விழாவிற்கான ஏற்பாடுகளை செங்குந்த மரபினர் மற்றும் குமரகோட்டம் கோவில் நிர்வாகம் இணைந்து செய்துள்ளனர்.