Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news அரோகரா கோஷம் விண்ணதிர.. ... கந்தசஷ்டி விரதம் முடித்த பழநி பக்தர்கள் கந்தசஷ்டி விரதம் முடித்த பழநி ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
தி.மலை அருணாசலேஸ்வரர் கோவிலில் கார்த்திகை தீப நெய்: உயர்கிறது கட்டணம்
எழுத்தின் அளவு:
தி.மலை அருணாசலேஸ்வரர் கோவிலில் கார்த்திகை தீப நெய்: உயர்கிறது கட்டணம்

பதிவு செய்த நாள்

26 அக்
2017
11:10

திருவண்ணாமலை: திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில், கார்த்திகை தீப நெய் காணிக்கை கட்டணத்தை உயர்த்துவது குறித்து, ஆலோசிக்கப்பட்டு வருகிறது. திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில், ஆண்டு தோறும் நடக்கும் கார்த்திகை தீப திருவிழா பிரசித்தி பெற்றது. இந்த ஆண்டு தீப திருவிழா, நவ., 23ல் கொடியேற்றத்துடன் துவங்குகிறது. டிச., 2ல், அதிகாலை, 4:00 மணிக்கு, கோவில் கருவறை எதிரில், பரணி தீபமும்; மாலை, 6:00 மணிக்கு, 2,668 அடி உயரமுள்ள மலை உச்சியில், மஹா தீபமும் ஏற்றப்பட உள்ளன.

இந்த ஆண்டு மஹா தீபம் ஏற்ற, ஆவின் நிர்வாகத்திடமிருந்து, 3,500 கிலோ, முதல் ரக நெய்யை கொள்முதல் செய்ய, கோவில் நிர்வாகம் முடிவு செய்துள்ளது. தற்போது, ஒரு கிலோ ஆவின் நெய், 411 ரூபாய்க்கு விற்கப்படுகிறது. பக்தர்களிடம், நெய் காணிக்கையாக, ஒரு கிலோவிற்கு, 200 ரூபாய் கட்டணம் வசூலிக்கப்பட்டு வருகிறது.

இதுகுறித்து, கோவில் இணை ஆணையர், ஜெகன்நாதன் கூறியதாவது
:ஆவின் நிர்வாகத்திடம் இருந்து கொள்முதல் செய்யப்படும் நெய், உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகளை கொண்டு பரிசோதித்த பிறகே, மஹா தீபம் ஏற்ற பயன்படுத்தப்படும். பக்தர்கள் நேரடியாக செலுத்தும் நெய் தரமானதாக இருக்க வேண்டும்; தரமற்ற நெய் அனுமதிக்கப்படாது.

நெய் காணிக்கை : கட்டணம் உயர்த்துவது குறித்து, அனைத்து தரப்பினரிடமும் கருத்து கேட்கப்பட்டு வருகிறது. அதனடிப்படையில் நடவடிக்கை எடுக்க, அறநிலையத்துறை ஆணையருக்கு கடிதம் அனுப்பப் படும்.இவ்வாறு அவர் கூறினார்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
மதுரை; மதுரை சித்திரை திருவிழாவில் இன்று தேனூர் மண்டபத்தில் எழுந்தருளிய சுந்தரராஜப் பெருமாள் சுவாமி, ... மேலும்
 
temple news
தஞ்சாவூர், சுவாமிமலை சுவாமிநாத சுவாமி கோவில் சித்திரை பெருவிழாவில் திருத்தேரோட்டம் கோலாகலமாக ... மேலும்
 
temple news
ராமநாதபுரம்: ராமேஸ்வரத்தில் உள்ள தாஸபக்த ஆஞ்சநேயர் கோயிலில் சிறப்பு வழிபாடு நடந்தது.  கோடை வெயில் ... மேலும்
 
temple news
காரைக்கால்: சனிக்கிழமை மற்றும் கோடைவிடுமுறையை முன்னிட்டு இன்று காரைக்கால் சனீஸ்வரபகவான் கோவிலில் ... மேலும்
 
temple news
மானாமதுரை: மானாமதுரை ஆனந்தவல்லி,சோமநாதர் கோயிலில் கடந்த 10 நாட்களுக்கு மேலாக நடைபெற்று வந்த சித்திரை ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar