பதிவு செய்த நாள்
26
அக்
2017
01:10
ஊத்துக்கோட்டை: மகா கால பைரவர் கோவிலில், நாளை, கும்பாபிஷேக விழா நடைபெற உள்ளது. எல்லாபுரம் ஒன்றியம், தொம்பரம்பேடு கிராமத்தில் உள்ளது மகா கால பைரவர் கோவில். இக்கோவிலில், ஒவ்வொரு மாதமும், வளர்பிறை, தேய்பிறை அஷ்டமி நாட்களில், சிறப்பு பூஜை நடைபெறும். அன்று சுற்றியுள்ள கிராமங்களில் இருந்து, திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமியை வழிபடுவர். தற்போது, பக்தர்கள் பங்களிப்புடன் கோவில் புதுப்பிக்கப்பட்டு, கால பைரவர், கணபதி, முருகன், நவக்கிரம் உள்ளிட்ட சன்னதிகள் கட்டப்பட்டு வருகின்றன. பணிகள் முடிந்து, நாளை, மகா கும்பாபிஷேகம் நடைபெற உள்ளது. திருப்பதி, திருமலா பஜனை குழுவினரின், பஜனை நிகழ்ச்சி நடைபெறும்.