திருவள்ளூர் : மணவாள நகர், நால்வர் திருமடத்தைச் சேர்ந்த சிவனடியார்கள், ஒவ்வொரு சிவன் கோவிலுக்கும் சென்று தேவாரம், திருவாசகம் ஓதி, உலக நலனுக்காக கூட்டு பிரார்த்தனை செய்கின்றனர். இதன், 125வது கூட்டு பிரார்த்தனை வழிபாடு, பெரியகுப்பம், ஆதிசோமேஸ்வரி சமேதஆதிசோமேஸ்வரர் கோவிலில் நடந்தது.தேவாரம், திருவாசகம் ஓதப்பட்டு மதியம்,2:30 மணிக்கு நிறைவடைந்து, மகா தீபாராதனை நடை பெற்றது. திரளான பக்தர்கள் கூட்டு பிரார்த்தனையில் கலந்து கொண்டனர்.