சாணார்பட்டி, -சாணார்பட்டி அருகே திருமலைக்கேணி சுப்பிரமணிய சுவாமி கோயிலில் கந்த சஷ்டி விழா நிறைவாக திருக்கல்யாண உற்ஸவம் நடந்தது.
கடந்த அக்.,20 முதல் கந்த சஷ்டி விழா நடந்து வந்தது. அன்று முதல் சிவ பூஜை திருக்காட்சி, சிவ உபதேச திருக்காட்சி, அருணகிரியாருக்கு நடனக்காட்சி அருளல், வேல் வாங்கும் திருக்காட்சி என ஒவ்வொரு நாளும் ஒரு நிகழ்ச்சி நடந்தது. நேற்று முன்தினம் காலை கந்த சஷ்டி கவசப் பாராயணத்துடன் கிரிவலம், திருமுருகாற்றுப்படை செந்தமிழ் வேள்வி நடந்தது. மாலை மகா அபிேஷகம், கலச நீராட்டு, லட்சார்ச்சனை மற்றும் மகா தீபாராதனை நடந்தது. தொடர்ந்து கிரிவலப் பாதையில் சூரசம்ஹார காட்சிகள் நடந்தது. விழாவின் நிறைவு நாளான நேற்று திருக்கல்யான உற்ஸவம் மற்றும் அன்னப்பாவாடை தரிசனம் நடந்தது. திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர். பரம்பரை அறங்காவலர் அழகுலிங்கம், செயல் அலுவலர் கணபதி முருகன் உள்ளிட்டோர் ஏற்பாடுகளை செய்திருந்தனர்.