பதிவு செய்த நாள்
30
அக்
2017
10:10
தஞ்சாவூர்: தஞ்சாவூரில், மாமன்னன் ராஜராஜ சோழனின், 1032வது ஆண்டு சதய விழா துவங்கியது. உலக புகழ் பெற்று விளங்கும் தஞ்சை பெரிய கோவிலை கட்டிய, ராஜராஜ சோழன் பிறந்த நாள், சதய விழாவாக கொண்டாடப்படுகிறது. இந்தாண்டு, 1032வது சதய விழா நேற்று துவங்கியது. விழா குழுத் தலைவர், திருஞானம், கலெக்டர், அண்ணாதுரை, பரம்பரை அறங்காவலர், பாபாஜி ராஜா பான்ஸ்லே ஆகியோர் கலந்து கொண்டனர். இன்று, அரசு சார்பிலும், முக்கிய பிரமுகர்கள் சார்பிலும், ராஜராஜ சோழன் சிலைக்கு மாலை அணிவிப்பு நிகழ்ச்சி நடைபெறும். திருமுறை திருவீதி உலா, பெருவுடையார், பெரியநாயகிக்கு, 48 வகை பொருள்கள் கொண்டு பேராபிஷேகம் நடக்கிறது. மாலையில் பரநாட்டியம், பட்டிமன்றம் போன்ற நிகழ்ச்சிகளுடன் விழா நிறைவடைகிறது. சதய விழாவுக்கு, ஓ.என்.ஜி.சி., நிறுவனம் சார்பில்,ஏழு லட்சம் ரூபாய் வழங்கப்பட்டுள்ளது.