பதிவு செய்த நாள்
30
அக்
2017
11:10
ஆலந்துார் : படவேட்டம்மன் கோவில் இடத்தில், 155 சதுர மீட்டர் இடத்தை, மெட்ரோ ரயில் நிர்வாகத்திற்கு வழங்க வேண்டி, நேற்று முன்தினம் இரவு, அங்கிருந்த கட்டடம் இடிக்கப்பட்டது. சென்னை, ஆலந்துார், எம்.கே.என்., சாலையில், படவேட்டம்மன் கோவில் உள்ளது. ஆலந்துார் - பரங்கிமலை மெட்ரோ ரயில் பாதை பணிக்காக, கோவிலுக்கு சொந்தமான, 155 சதுர மீட்டர் பரப்பளவு இடத்தை, மெட்ரோ நிர்வாகம் எடுக்கதிட்டமிட்டது. இதற்கு ஈடாக, புதிய கோவில் கட்டிக் கொடுக்கவும், இடத்திற்கு இழப்பீடு வழங்கவும் மெட்ரோ நிர்வாகம் சம்மதித்தது. கடந்த, 2013ல், அதே இடத்தின் பின் பகுதியில், மெட்ரோ நிர்வாகம் புதிய கோவில் கட்டிக் கொடுத்தது.இந்த புதிய கோவில் கும்பாபிஷேகம், வரும், நவ., 9ம் தேதி நடக்க உள்ளது. இதையடுத்து, நேற்று முன்தினம் இரவு, 155 சதுர மீட்டர் பரப்பளவில் இருந்த கட்டடத்தை, கோவில் நிர்வாகம் இடித்தது.
மதிப்பீடு தயாரிக்கும் பணி: மெட்ரோ நிர்வாகத்திற்கு ஒப்படைக்க உள்ள, 155 சதுர மீட்டர் இடத்திற்கு, மதிப்பீடு தயாரிக்கும் பணி நடைபெற உள்ளது. இழப்பீடு தொகையை, மெட்ரோ நிர்வாகம் வழங்கியதும், இடத்தை ஒப்படைக்க உள்ளோம்.அறநிலைத்துறை அதிகாரிகள்