பதிவு செய்த நாள்
30
அக்
2017
11:10
மானாமதுரை:மானாமதுரையில் கார்த்திகைக்காக தற்போதே விளக்குகள் தயாரிக்கப்பட்டு விற்பனைக்கு தயார் நிலையில் உள்ளன.மானாமதுரை குலாலர் தெருவில் 300க்கும் மேற்பட்ட குடும்பங்கள் மண்பாண்ட தொழிலில் ஈடுபட்டுள்ளனர்.இவர்கள் ஆண்டு தோறும் சீசனிற்கு தகுந்தாற் போல் மண்ணால் ஆன பொருட்களை தயார் செய்துவருகின்றனர். மண் கூஜாக்கள், ஜாடிகள்,ஜக்குகள்,அடுப்புகள்,பானைகள்,சட்டிகள்,தோசை,பணியார சட்டிகள், தட்டுகள், டம்ளர்கள், கோயில்களில் பிரார்த்தனைக்கு தேவைப்படும் அக்னிசட்டிகள்,ஆயிரங்கண்பானைகள்,சாமி,குழந்தை உருவங்கள், குதிரை, மாடு, முளைப்பாரி ஓடுகள், கார்த்திகை தீப விளக்குகள்,கஞ்சி கலயங்கள்,தீர்த்த கலயங்கள்,விநாயகர் சிலைகள்,சாமி சிலைகள் மற்றும் மற்றும் குருவி கூடுகள் எனபல்வேறு வகையான பொருட்களை கலைநயத்துடன் தயாரிக்கின்றனர். தமிழகத்தின் பலபகுதிகளிலிருந்தும் வியாபாரிகள் மானாமதுரைக்கு வந்து மண்பாண்ட பொருட்களைவாங்கிச் செல்கின்றனர்.வரும் டிசம்பர் 25ந் தேதி நடைபெற உள்ள திருக்கார்த்திகை தீப திருநாளுக்காகவிளக்குகள் தயாரிக்கும் பணியை ஆரம்பித்து தற்போது அவற்றை
விற்பனைக்கு தயாராக வைத்துள்ளனர்அணையா விளக்கு, துளசி மாடம்,பெரிய கம்ப்யூட்டர் விளக்கு,குருவாயூர் ஸ்டாண்ட்,5 முக குருவாயூர் விளக்கு,2 அடுக்கு குருவாயூர் விளக்கு, 2,3 அடுக்கு தீப விளக்குகள்,1 அடுக்கு 7 சிட்டி மற்றும் 5 சிட்டி விளக்குகள்,அகல் விளக்குகள், தேங்காய் முக விளக்குகள்,சாமி உருவ விளக்குகள் என ரூ.1லிருந்து ரூ.800 வரைக்கும் விளக்குகள்விற்பனைக்கு தயாராக உள்ளன. மண்பாண்ட தொழிலாளி ரங்கசாமி கூறியதாவது: திருகாகார்த்திகை திருநாளுக்காக கடந்த 3மாதங்களுக்கு முன்பே மதுரை,தஞ்சாவூர்,புதுக்கோட்டை,தேனி,விருதுநகர்,திண்டுக்கல்,போன்ற மாவட்டங்களிலிருந்து தமிழகத்தின் பல பகுதிகளிலிருந்தும் வரும் வியாபாரிகள் தங்களுக்கு தேவையான விளக்குகளை ஆர்டர் கொடுத்துச் செல்வர்.நாங்கள் அதற்கு தகுந்தாற் போல்அவர்கள் விரும்பும் டிசைன்களில் சிறிய மற்றும் பெரிய விளக்குகளை கலைநயத்தோடு செய்துஅவர்களுக்கு விற்பனை செய்து வருகிறோம்,என்றார். ராஜபாளையம் மொத்த வியாபாரி ஹரிராமச்சந்திரலிங்கம் கூறியதாவது:எங்கள் ஊர் பகுதியில் மானாமதுரை மண்பாண்ட பொருட்களுக்கு தனி மவுசு உண்டு. அதனால் நாங்கள் வருடந்தோறும் சீசனிற்கு தகுந்தாற்போல் இங்கு வந்து மண்பாண்ட பொருட்களை மொத்தமாக கொள்முதல் செய்து ராஜபாளையத்தில் விற்பனை செய்து வருகிறோம்.தற்போது திருக்கார்த்திகைக்காகதீப விளக்குகள் வாங்க வந்துள்ளோம்.இந்த வருடம் நிறைய டிசைன்களில் பல்வேறு வகையானவிளக்குகளை தயார் செய்து விற்பனைக்கு வைத்துள்ளனர் அதுவும் இந்த வருடம் சாமி உருவங்களில்செய்யப்பட்டுள்ள விளக்குகள் மக்களை கவரும் விதத்தில் உள்ளன, என்றார்.