பழநி: பழநி முருகன்கோயில் ரோப் கார் பராமரிப்பு பணிகள் முடிந்து 48 நாட்களுக்கு பின், நேற்று சிறப்பு பூஜையுடன் மீண்டும் இயக்கப்பட்டது. பழநி மலைக்கோயிலுக்கு மூன்று நிமிடங்களில் செல்ல ரோப்கார் வசதி உள்ளது. இது தினமும் காலை 7:00 மணி முதல் இரவு 8:30 மணி வரை இயங்குகிறது. ஆண்டு பராமரிப்பு பணிக்காக செப்.,12ல் ரோப்கார் இயக்கம் நிறுத்தப்பட்டது. புதிய ஷாப்ட், அதிர்வலைகள் கண்டறியும் கருவிகள் மாற்றப்பட்டுள்ளன. கம்பி வடத்தில் எட்டு பெட்டிகள் பொருத்தப்பட்டு, கடந்த சில நாட்களாக சோதனை ஓட்டம் நடந்தது. இதையடுத்து 47 நாட்களுக்குபின் நேற்று காலை 6:30 மணிக்கு செல்வசுப்ரமணியன் குருக்கள் சிறப்பு பூஜை செய்தார். இதில் இணை ஆணையர் செல்வராஜ், துணை ஆணையர் மேனகா மற்றும் பொறியாளர்கள், அலுவலர்கள் உட்பட பலர் பங்கேற்றனர்.