திருப்பரங்குன்றம்: திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் கார்த்திகை தீப திருவிழா நவ., 24ல் கொடியேற்றத்துடன் தொடங்குகிறது.அன்று காலை 9:30 முதல் 10:00 மணிக்குள் கொடியேற்றப்படும். திருவிழா நடக்கும் டிச., 3 வரை தினமும் காலை, மாலை பல்வேறு வாகனங்களில் சுவாமி, தெய்வானை எழுந்தருளுவர். முக்கிய நிகழ்ச்சியாக டிச.,1ல் சுவாமிக்கு பட்டாபிஷேகம், டிச., 2ல் வைரத் தேரோட்டம், மாலையில் மலைமேல் கார்த்திகை மகா தீபம் ஏற்றப்படும். டிச., 3ல் தீர்த்த உற்ஸவம் நடக்கிறது.