மதுரை;மதுரை வில்லாபுரத்தில் ஆன்மிக சேவா சங்கம் சார்பில் சங்க விநாயகர் கோயிலில் கந்த சஷ்டி விழா நடந்தது. மகா சக்திவேலுக்கு பல்வேறு அபிேஷகம் செய்யப்பட்டது. நிறைவு நாளில் முருகன், தெய்வானை திருமண காட்சியும், பூஜையும் நடந்தது. நிர்வாக தலைவர் நல்லதம்பி, துணைத்தலைவர் பாலசுப்பிரமணியன், செயலாளர் மனோகரன் ஏற்பாடுகளை செய்திருந்தனர். பூஜைகளை பட்டர் கிருஷ்ணன் செய்தார்.