பதிவு செய்த நாள்
01
நவ
2017
11:11
போளூர்: திருவண்ணாமலை மாவட்டம் போளூரில், மாதா அமிர்தானந்தமயி சேவா சமிதி சார்பில், உலக நன்மைக்காக, 1,008 விளக்கு பூஜை நடந்தது. இதில் போளூர் மற்றும் அதை சுற்றியுள்ள கிராமங்களைச் சேர்ந்த 1,500 பெண்கள் பங்கேற்றனர். மேலும், ஆன்மீக சொற்பொழிவு, தியானம் நடந்தது. சின்னசேலத்தில் நாளை கும்பாபிஷேகம் சின்னசேலம் : சின்னசேலம் நகரில் உள்ள மூன்று கோவில்களில், நாளை கும்பாபி ேஷகம் நடக்கிறது. சின்னசேலம் நகரில் உள்ள மாரியம்மன், வினாயகர், அம்சகுளம் எல்லையம்மன் மற்றும் பாரிவார தெய்வங்களுக்கு, நாளை (2ம்தேதி) கும்பாபிஷகம் நடக்கிறது. இதையொட்டி, நாளை காலை 9:00 மணி முதல் 10:00 மணிக்குள் வினாயகருக்கும், மாரியம்மனுக்கும் முன்றாம் கால யாகபூஜைகள் செய்து கும்பாபிஷேகம் நடக்கிறது. காலை 10:00 மணி முதல் 10:30 மணிக்குள், அம்சகுளம் எல்லையம்மனுக்கு கும்பாபிஷேகம் நடக்கிறது.