பழநி, ஒட்டன்சத்திரம் - பழநி வரை பாதயாத்திரை பக்தர்களுக்கான நடைபாதை பல இடங்களில் சேதமடைந்தும், புதர்மண்டயும் பாழாகி வருகிறது. பாதயாத்திரைக்கு பிரசித்தி பெற்ற பழநி தைப்பூச விழாவை முன்னிட்டு மார்கழியில் ஏராளமான முருகபக்தர்கள் சென்னை, மதுரை உட்பட பல்வேறு மாவட்டங்களில் இருந்தும் பழநிக்கு பாதயாத்திரையாக வருகின்றனர். ஒட்டன்சத்திரம் - பழநி வரை பாதயாத்திரை பக்தர்களுக்காக அகலப்படுத்தப்பட்ட ரோடு பல இடங்களில் சேதமடைந்து, குண்டும் குழியுமாக உள்ளது. மேலும் 6 அடி அகலம் உள்ள ரோடு புதர்மண்டி செடி, கொடிகள் வளர்ந்து வெறும் 2 அடியாக சுருங்கியுள்ளது. நெடுஞ்சாலைத்துறையினர் பக்தர்களின் நடைபாதை ஆக்கிரமிப்புகளை அகற்றியும், சேதமடைந்துள்ளதை செப்பனிட்டும், பராமரிக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் வலியுறுத்தியுள்ளனர்.