பதிவு செய்த நாள்
01
நவ
2017
12:11
புதுச்சேரி : அரியாங்குப்பம் கோவிலில் நாயன்மார்கள் நால்வர் சிலை பிரதிஷ்டை செய்யப்பட்டு, கும்பாபிஷேகம் இன்று நடக்கிறது. அரியாங்குப்பம், செடிலாடும் செங்கழுநீர் மாரியம்மன் கோவிலில், திருஞான சம்பந்தர், திருநாவுக்கரசர், சுந்தரமூர்த்தி, மாணிக்கவாசகர் ஆகியோர் சிலைகள் பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ளன. இதற்கான கும்பாபிஷேக விழா இன்று (1ம் தேதி) காலை நடக்கிறது. விழாவையொட்டி, இன்று காலை 7:00 மணிக்கு, திருப்பள்ளி எழுச்சி, காலை 8:00 மணிக்கு, நாயன்மார்கள் நால்வருக்கு இரண்டாம் கால வேள்வி பேரொளி வழிபாடு நிறைவு, காலை 9:00 மணிக்கு, திருமுறை விண்ணப்பம் நிகழ்ச்சி நடக்கிறது. தொடர்ந்து, காலை 10:00 மணிக்கு, நால்வர் திருமேனிக்கும் கும்பாபிஷேகம் செய்யப்படுகிறது.