முத்தாலம்மன் கோயில் திருவிழா பேச்சுவார்த்தையில் சமாதானம்
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
01நவ 2017 12:11
கம்பம், கம்பத்தில்முத்தாலம்மன்கோயில் திருவிழா கொண்டாடுவதில் எழுந்த பிரச்னையில் பேச்சுவார்த் தையில் சமாதானம் ஏற்பட்டது. கம்பம் மெயின்ரோட்டில் ஒக்கலிகர் கவுடர் சமுதாயத்திற்கு பாத்தி யப்பட்டமுத்தாலம்மன்கோயில் இருந்தது. 50 ஆண்டுகளுக்கும் மேலான இக்கோயில் கடந்த சில ஆண்டுகளுக்கு முன், நெடுஞ்சாலைத்துறையினரால் அகற்றப்பட்டது. ஆனால் இச் சமுதாயத்தினர் ஆண்டுதோறும் அதே இடத்தில் அம்மன் சிலையை வைத்து திருவிழா கொண்டாடுவர். அதன்படி நேற்றும், இன்றும் திருவிழா நடத்த திட்டமிடப்பட்டது. ஆனால் நெடுஞ்சாலைத்துறை, வருவாய்த்துறை அதிகாரிகள் மற்றும் போலீசார் அங்கு கட்டப்பட்டிருந்த பீடத்தை அகற்ற முற்பட்டனர். அதற்குஅச்சமுதாயத்தினர் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். உத்தமபாளையம் டி.எஸ் பி., அண்ணாமலை தலை மையில் பேச்சுவார்த்தை நடந்தது. இரண்டு நாள் திருவிழாவிற்கு பின் நாளை(நவ.2ல்) பீடத்தை அகற்றிக் கொள்கிறோம் என்று விழாக்கமிட்டியினர் உறுதியளித்ததால் பிரச்னை முடிவுக்கு வந்தது.