தாண்டிக்குடி, தாண்டிக்குடி அருகே கானல்காட்டில் இராமர் கோயில் மற்றும் பரிவர்த்தனை சுவாமிகளுக்கு கும்பாபிஷேகம் நடந்தது. நான்கு கால யாகசாலை பூஜையில் மங்களவாத்தியம், விநாயகர் வழிபாடு, புண்யாஹயாசனம், சங்கல்பம், முளைப்பாரியுடன் கிராம தெய்வ வழிபாடு நடந்தது. நான்கு கால யாகசாலை பூஜையுடன் கடம் புறப்பட்டு விநாயகர், காளியம்மன், இராமர் கோயில் கலசங்களில் புனிதநீர் தெளிக்கப்பட்டது. தொடர்ந்து தீபாதாரனை மலர்களால் அபிஷேகம் நடந்தது. ஏற்பாடுகளை நிர்வாகத்தினர், கிராமத்தினர் செய்திருந்தனர்.