பதிவு செய்த நாள்
02
நவ
2017
01:11
கோவிந்தவாடி: தட்சிணாமூர்த்தி கோவிலில், ஆறு லட்ச ரூபாய், உண்டியல் மூலமாக, வருவாய் கிடைத்துள்ளது என, கோவில் நிர்வாகம் தெரிவித்துள்ளது. வாலாஜாபாத் ஓன்றியத்தில், ’குரு பரிகார ஸ்தலம்’ என அழைக்கப்படும், கைலாசநாதர் சமேத தட்சிணாமூர்த்தி கோவில் உள்ளது. இந்து சமய அறநிலைய துறை உதவி ஆணையர் ரமணி முன்னிலையில், உண்டியல் திறக்கப்பட்டது. இதில், ஆறு லட்சத்து, 8,664 ரூபாய் ரொக்கமாக வருவாய் கிடைத்துள்ளது. மேலும், 21 கிராம் தங்கம் மற்றும் 8 கிராம் வெள்ளி பொருட்கள் கிடைத்துள்ளன. இந்த பணத்தை கோவில், செயல் அலுவலர் குமரன், அரசுடமை வங்கியில், ’டிபாசிட்’ செய்தார்.