செஞ்சி: செஞ்சி பகுதி சிவன் கோவில்களில் பிரதோஷ வழிபாடு நடந்தது. செஞ்சி ஏகாம்பரேஸ்வரர்கோவிலில் ஏகாம்பரேஸ்வரர், காமாட்சியம்மனுக்கு சிறப்பு அபிஷேகம், செய்தனர். நந்தீஸ்வரருக்கு பால் அபிஷேகம், தீபாராதனை நடந்தது. பெண்கள் அகல் விளக்கேற்றி நந்தீஸ்வரை வழிபட்டனர். கிரிசங்கர் குருக்கள் பூஜைகளை செய்தார். பீரங்கிமேடு அருணாச்சலேஸ்வரர் கோவிலில் அருணாச்சலேஸ்வரர், அபிதகுஜாம்பாளுக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம் செய்தனர். நந்தீஸ்வரருக்கு சிறப்பு அபிஷேகமும், சாமி கோவில் உலாவும் நடந்தது. முக்குணம் முக்குன்றநாத உடையார் கோவிலில் முக்குன்றநாதர், நந்தீஸ்வரருக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம் செய்தனர். அர்ச்சகர் செல்வம் பூஜைகளை செய்தார். பெருவளூர் கோகிலாம்பாள் கோட்டீஸ்வரர் கோவிலில் கோட்டீஸ்வரர், கோகிலாம்பாள் மற்றும் நந்தீஸ்வரருக்கு சிறப்பு அபிஷேகம் செய்தனர். பெண்கள் அகல் விளக்கேற்றி வழிபட்டனர். கணபதி குருக்கள் பூஜைகளை செய்தார். கிருஷ்ணாபுரம் சுந்தரவிநாயகர் கோவிலில் உள்ள ஈஸ்வரன் சன்னதியில் நந்தீஸ்வரருக்கு சிறப்பு அபிஷேகம் மகா தீபாராதனை நடந்தது. பெண்கள் அகல் விளக்கேற்றி வழிபட்டனர்.