பதிவு செய்த நாள்
02
நவ
2017
01:11
நங்கநல்லுார்: நங்கநல்லுார் பகுதியில், ஆஞ்சநேயர் கோவில் உள்ளது. இந்து அறநிலைய துறையினர் கீழ் செயல்படும் இந்த கோவிலை சுற்றி, 10க்கும் மேற்பட்ட தெருக்கள் உள்ளன. பக்தர்கள் அதிகம் கூடும், சிறப்பு விசஷே நாட்களில், திருட்டு, வழிப்பறி சம்பவங்கள் அதிகம் நடக்கும். இதையடுத்து, கோவிலில் பாதுகாப்பை பலப்படுத்த, போலீசார் மற்றும் கோவில் நிர்வாகம் முடிவு செய்தது. கோவிலை ஒட்டி, சிறிய அளவில் ஒரு காவல் உதவி மையம் உள்ளது. அங்கு, 24 மணி நேரம் பாதுகாப்பு வழங்கும் வகையில், தற்போதுள்ள மையத்தை இடித்து, பெரிய அளவில் கட்டப்பட உள்ளன. மேலும், கோவிலை சுற்றி, 30 கேமராக்கள் அமைக்கப்பட உள்ளன. நன்கொடையாளர்கள் உதவியுடன், கேமராக்கள் மற்றும் காவல் உதவி மையம் அமைக்கப்படுகிறது.