பதிவு செய்த நாள்
02
நவ
2017
01:11
வெண்ணந்தூர்: அத்தனூர், ராஜகணபதி கோவில் கும்பாபிஷேகம் நடந்தது. வெண்ணந்தூர் அடுத்த, அத்தனூர் பெரியபாவடி ராஜகணபதி, துர்க்கை அம்மன், தட்சிணாமூர்த்தி, லிங்கோத்பவர், அத்தனூர் அம்மன், நவக்கிரகம், சித்திவிநாயகர், சக்தி விநாயகர், செல்வ ராஜகணபதி கோவில் கும்பாபிஷேகம் நேற்று நடந்தது. முன்னதாக, கடந்த, 29ல் கிராம சாந்தி, நேற்று, கணபதி ஹோமம், நவக்கிரக ஹோமம், மகாலட்சமி ஹோமம் ஆகியவை நடந்தன. காலை, 6:00 மணிக்கு நான்காம் கால யாக பூஜை, நாடி சந்தானம், கடம் புறப்பாடு, மகா தீபாராதனை நடந்தது. 9:00 மணிக்கு மேல், மகா கும்பாபிஷேகம் நடந்தது. தொடர்ந்து தீபாராதனை, அன்னதானம் வழங்கப்பட்டது. விழா ஏற்பாடுகளை, ஊர் மக்கள் செய்திருந்தனர்.