பதிவு செய்த நாள்
04
நவ
2017
10:11
ராமேஸ்வரம் ராமநாதசுவாமி கோயிலில் அபிஷேகத்திற்கு கங்கை தீர்த்தம் பயன்படுத் தாமல்,கோயில் நிர்வாகம் ஆகம விதி மீறிசெயல்படுவதாக பக்தர்கள் தெரிவித்தனர்.
இந்தியாவில் 12 ஜோதிர்லிங்க தலங்களில் ஒன்றாக விளங்கும் ராமேஸ்வரம் கோயிலில் 22 புனித தீர்த்தங்கள் உள்ளன. இக்கோயிலில் உச்சிகால பூஜையில் சுவாமிக்கு கங்கை தீர்த் தத்தில் அபிேஷகம் செய்து, பக்தருக்கு தீர்த்த பிரசாதமாக வழங்குவர்.
காசிக்கு செல்ல முடியாத பக்தர்கள், ராமேஸ்வரம் கோயிலில் சுவாமிக்கு நடக்கும் கங்கை அபிஷேகத்தை கண்டு தரிசித்து புனித நீரை பருகினால், காசிக்கு சென்று வந்த பலன் கிடை க்கும் என்பது ஐதீகம்.
இதனால் கோயில் அலுவலகத்தில் ரூபாய் 30க்கு கங்கை தீர்த்த செம்பும் விற்கப்படுகிறது. இந்த கங்கை தீர்த்தம் ஹரியானா மாநிலம் ஹரித்துவாரில் ஓடும் கங்கை நதியில் இருந்து 20 கேன்களில்(ஒரு கேன் 20 லிட்டர் கொள்ளளவு) நிரப்பி, ரயில் மூலம் ராமேஸ்வரம் வரும். இதற்கானமுழு செலவையும் வட மாநில பக்தர் ஓம்பிரகாஷ்என்பவர் நன்கொடையாக வழங்குகிறார்.
கங்கை தீர்த்த கேன்கள் 3 மாதத்திற்கு ஒரு முறை கோயிலுக்கு வருகிறது. ஆனால்கடந்த ஓராண்டுக்கு மேலாக சுவாமிக்கு கங்கை தீர்த்தத்தில் அபிஷேகம் செய்யாமல், பக்தருக்கும் தீர்த்த பிரசாதம் வழங்காமல் கங்கை தீர்த்த கேனை கோயிலுக்குள் பழைய பொருட்களுடன் போட்டுள்ளனர்.
தீர்த்த காலி கேனை வட மாநில பக்தருக்கு திருப்பி அனுப்பாததால், கோயிலுக்கு கங்கை தீர்த் தமும் வருவதில்லை. சுவாமிக்கு கங்கை நீரில் அபிஷேகம் செய்யாமல், கோயில் நிர்வாகம் ஆகம விதிகளை மீறியதாக பக்தர்கள் தெரிவித்தனர் ராமேஸ்வரம் கோயில் பாரம்பரிய பாது காப்பு குழு பக் ஷி சிவராசன் கூறியதாவது: கோயிலில் ஆகமவிதிப்படி தீர்த்தம், விபூதி வழங்க தவறினால் இந்து அறநிலையத்துறை சட்டபிரிவு 106ன்படி கோயில் அதிகாரிகள், ஊழியர்கள் மீது குற்ற வழக்கு தொடரலாம். எனவே, ஆகம விதி தெரியாமல் கங்கை தீர்த்தத்தை கிடப்பில் போட்ட ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும், என்றார்.
கோயில் இணை ஆணையர் மங்கையர்கரசி கூறுகையில், கங்கை தீர்த்தத்தில் சுவாமிக்கு அபிஷேகம் செய்யப்படவில்லையா என விசாரித்து, சம்பந்தப்பட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.