வத்திராயிருப்பு கூமாப்பட்டி முத்தாலம்மன் கோயில் விழா துவக்கம்
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
04நவ 2017 01:11
வத்திராயிருப்பு: வத்திராயிருப்பு அருகே கூமாப்பட்டி முத்தாலம்மன் கோயில் தேரோட்ட விழா துவங்கியது.
இக்கோயில் விழா கோயில் அருகே கலைமண்டபத்தில் கலைவிழாவுடன் துவங்கியது. ஆசிரியர்கள், அரசுப்பணியாளர்கள் ஓய்வு பெற்றோர் நற்பணி மன்றத்தின் சார்பில் கலைவிழாக்கள் துவக்கப்பட்டது.
தலைவர் நடராஜன் துவக்கினார். ஊர்த்தலைவர் வீரகுமார் முன்னிலை வகித்தார். செயலாளர் சரவணன் வரவேற்றார். பொருளாளர் அண்ணாமலை அறிக்கை வாசித்தார். இதை தொடர்ந்து கலைவிழா துவங்கியது.
முதல்நிகழ்ச்சியாக பட்டிமன்றம் , 2ம் நிகழ்ச்சியாக மோகன் குழுவினர் பக்திப்பாடல்கள் இசை நிகழ்ச்சி நடந்தது.
கோயிலில் காப்புக்கட்டப்பட்டு திருவிழா ஏற்பாடுகள் துவக்கப்பட்டது. சிறப்பு பூஜைகள் நடந்தது. உதவி தலைவர் அன்னச்சாமி, நிர்வாகிகள் ஜெயபால், சக்திவேல், கருப்பையா, பாலசுப்பிரமணியன், அழகர்சாமி,, போஸ் ஏற்பாடுகளை செய்தனர்.