Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news காஞ்சி கைலாசநாதர் கோவிலில் ... மயிலம் முருகர் கோவிலில் ஐப்பசி  மாத கிருத்திகை விழா மயிலம் முருகர் கோவிலில் ஐப்பசி மாத ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
13ம் நூற்றாண்டு கல்வெட்டு சிவகங்கையில் கண்டுபிடிப்பு
எழுத்தின் அளவு:
13ம் நூற்றாண்டு கல்வெட்டு சிவகங்கையில் கண்டுபிடிப்பு

பதிவு செய்த நாள்

06 நவ
2017
11:11

சிவகங்கை: சிவகங்கையில் பிற்கால பாண்டிய மன்னர் காலத்து 13 ம் நுாற்றாண்டைச் சேர்ந்த இரண்டு கல்வெட்டுக்கள் கண்டறியப்பட்டன. சிவகங்கை ராமகிருஷ்ணா நடுநிலைப்பள்ளி அருகே அறநிலையத்துறைக்கு சொந்தமான இடத்தில் இரண்டு கல்வெட்டுக்கள் இருப்பதை விரிவுரையாளர் தங்கமுனியாண்டி கண்டறிந்தார். சிவகங்கை தாசில்தார் கந்தசாமி அந்த கல்வெட்டுக்களை மீட்டு அரசு அருங்காட்சியகத்தில் ஒப்படைத்தார். அருங்காட்சியக காப்பாட்சியர் பக்கிரிசாமி, புதுக்கோட்டை மாவட்டத் தொல்லியல் கழகத் தலைவர் ராஜேந்திரன், கல்வெட்டுகளை ஆய்வு செய்தனர். அந்த இரு கல்வெட்டுகளும் 13 ம் நுாற்றாண்டு பிற்காலப் பாண்டியர் காலத்தை சேர்ந்தவை என்பது தெரியவந்தது. காப்பாட்சியர் பக்கிரிசாமி கூறியதாவது: பிற்கால பாண்டிய மன்னர், நல்லுார் என்ற ஊரில் இருந்த இறைவனுக்கு ஒரு மா நிலம் தானமாக கொடுத்துள்ளார். அந்த நிலத்திற்கு கடமை, அந்தராயம், வினியோகம், பேர்கடமை போன்ற வரிகள் நீக்கப்பட்டுள்ளன.

மேலும் நிலத்தை சந்திரன், சூரியன் உள்ளவரை (காலம் முழுவதும்) அனுபவித்து கொள்ள அனுமதிக்கப்பட்டுள்ளது. நிலமானது குடிதாங்கி என்ற அளவுகோலால் அளக்கப்பட்டுள்ளது. இந்த செய்தி ஒரு கல்வெட்டில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதேபோல் மற்றொரு கல்வெட்டில், பிற்காலப் பாண்டிய மன்னர் புல்லுார் என்ற ஊரில் இருந்த இறைவனுக்கு நிலம் தானமாக வழங்கியுள்ளார். அந்த நிலத்தை பூதலன் நாராயணன் ஸ்ரீரங்க வள்ளல் என்ற குறுநிலத் தலைவன் அல்லது அந்த பகுதி அரசு அதிகாரி சுந்தரபாண்டியன், என்ற பெயருடைய அளவுகோலால் அளந்துள்ளனர், என்ற செய்தி தெரிவிக்கப்பட்டுள்ளது. நல்லுார், புல்லுார் ஆகிய இரு ஊர்களும் சிவகங்கை மாவட்டத்தைச் சேர்ந்தவை தான். தற்போது அவற்றின் பெயர்கள் மறுவியிருக்கலாம். இரு கல்வெட்டுகளும் அருங்காட்சியக கற்சிற்ப பூங்காவில் காட்சிக்காக வைக்கப்பட்டுள்ளன. இதனை மக்கள் பார்வையிடலாம், என்றார்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
கும்மிடிப்பூண்டி: சிறுவாபுரி முருகன் கோவிலில் இன்று ஏராளமான பக்தர்கள் குவிந்ததால், நீண்ட வரிசையில் ... மேலும்
 
temple news
அயோத்தி; விவாக பஞ்சமி என்பது இந்துக்களால் ராமர் மற்றும் சீதையின் திருமணத்தை கொண்டாடும் ஒரு ... மேலும்
 
temple news
மயிலாடுதுறை; மயிலாடுதுறையில் காவிரி துலா உற்சவத்தை முன்னிட்டு மாயூரநாதர் வதான்யேஸ்வரர் ஆலயங்களில் ... மேலும்
 
temple news
மூணாறு; சபரிமலை மண்டல கால மகர விளக்கு சீசன் நெருங்குவதால் சத்திரம், புல்மேடு வழியாக சபரிமலைக்கு ... மேலும்
 
temple news
திருப்பதி; திருச்சானூர் ஸ்ரீ பத்மாவதி தாயார் கோயிலில் கோயில் ஆழ்வார் திருமஞ்சனம் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar