பதிவு செய்த நாள்
06
நவ
2017
11:11
காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் கைலாசநாதர் கோவிலில், தல வரலாறு குறித்த, புதிய தகவல் பலகை வைக்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது. ராஜசிம்மேஸ்வரம் என, அழைக்கப்படும், காஞ்சிபுரம் கைலாசநாதர் கோவில், முதலாம் நரசிம்ம வர்மன் என்ற ராஜசிம்ம பல்லவனால், கி.பி., 700 - 728ம் ஆண்டுகளில் கட்டப்பட்டது. வரலாற்று சிறப்பு மிக்க இக்கோவிலுக்கு தினமும், ஏராளமான வெளியூர், வெளிநாட்டு சுற்றுலா பயணியர் வந்து செல்கின்றனர். இக்கோவிலின், தல வரலாற்றை தெரிந்து கொள்ளும் வகையில், தொல்லியல் துறை சார்பில், கடந்த ஜூன் மாதம், தகவல் பலகை வைக்கப்பட்டது. தற்போது, இப்பலகையில் உள்ள எழுத்துக்கள் மறைந்து, மங்கிய நிலையில், பொலிவிழந்துள்ளது. இதனால், தகவல் பலகை இருந்தும், இக்கோவில் வரலாற்றை சுற்றுலா பயணியர் படித்து தெரிந்துகொள்ள முடியாத நிலை உள்ளது. எனவே, புதிய தகவல் பலகை வைக்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது.