பதிவு செய்த நாள்
07
நவ
2017
10:11
திருப்பதி: ஏழுமலையான் பிரசாதங்களான, லட்டு மற்றும் பொங்கல் படங்கள் அடங்கிய புதிய தபால் தலைகளை, தபால் துறை வெளியிட்டுள்ளது. இந்திய தபால் துறை, தற்போது திருமலை ஏழுமலையான் லட்டு மற்றும் பொங்கல் பிரசாதங்களின் படங்கள் அடங்கிய புதிய தபால் தலைகளை வெளியிட்டுள்ளது. இதுவரை புகழ்பெற்ற அரசர்கள், ராணிகள், முக்கிய இடங்கள், வரலாற்று சின்னங்கள், மறைந்த முன்னாள் தலைவர்கள் உள்ளிட்ட உருவங்களை அடங்கிய தபால் தலைகளை, தபால் துறை வெளியிட்டு வந்தது.தற்போது புதிய வரவாக, நாட்டில் பிரசித்தி பெற்று விளங்கும் உணவு பண்டகங்களின் படங்கள் அடங்கிய தபால் தலைகளை வெளியிட்டு வருகிறது. அதன்படி, திருமலை ஏழுமலையான் பிரசாதமான லட்டு, பொங்கல் படங்களை தாங்கிய, ஐந்து ரூபாய் மதிப்புள்ள தபால் தலைகள் வெளியிடப்பட்டுள்ளன.