பதிவு செய்த நாள்
10
நவ
2017
12:11
உத்திரமேரூர் : பினாயூர் கைலாசநாதர் கோவிலில், மஹா கும்பாபிஷேக விழா, நேற்று கோலாகலமாக நடந்தது. உத்திரமேரூர் ஒன்றியம், பினாயூரில், 700 ஆண்டுகள் பழமை வாய்ந்த, திரிபுரசுந்தரி சமேத கைலாசநாதர் கோவில் உள்ளது. அப்பகுதி பாலாற்றங்கரையில் உள்ள இக்கோவில், சில ஆண்டுகளாக பழுதடைந்து காணப்பட்டதையடுத்து, புனரமைப்பு பணி துவங்கியது. சமீபத்தில் நிறைவடைந்து, நேற்று, மஹா கும்பாபிஷேக விழா நடந்தது. முன்னதாக, 7ம் தேதி, கணபதி பூஜை, கோபூஜை, தனபூஜை உட்பட பல பூஜைகள் நடந்தன. நேற்று காலை, நான்காம் கால யாக பூஜைகளை தொடர்ந்து, கலசம் புறப்பாடு முடிந்து, 10:00 மணிக்கு, மஹா கும்பாபிஷேகம் நடந்தது. சுற்று வட்டார கிராமங்களைச் சேர்ந்த நுாற்றுக்கணக்கான பக்தர்கள் பங்கேற்று, சுவாமியை தரிசித்தனர்.