ஊட்டி;ஊட்டி அடுத்துள்ள ஆனந்தமலை முருகன் கோவிலில் மாதந்தோறும் கிருத்திகை பூஜை நடந்து வருகிறது. நடப்பு மாதம் கிருத்திகை பூஜையையொட்டி முருக பெருமானுக்கு சிறப்பு பூஜைகள் நடத்தப்பட்டது. பின், முருக பக்தர்களின் ஆடல், பாடல் நிகழ்ச்சியை தொடர்ந்து நடந்த சிறப்பு பூஜையில் திரளான பக்தர்கள் கலந்துகொண்டனர். பூஜை ஏற்பாடுகளை ஆலய அறங்காவலர் ராமசந்திரன் செய்திருந்தார்.