மயிலாடுதுறை: நாகை மாவட்டம் மயிலாடடுதுறையில் திருவாவடுதுறை ஆதீனத்திற்கு சொந்தமான அபயாம்பிகை சமேத மாயூரநாதர் சுவாமி கோயில் உள்ளது. மிகவும் பிரசித்திபெற்ற இக்கோயிலில் ஆண்டு தோறும் ஐப்பசி மாதம் 30 நாட்களும் துலா உற்சவம் மிகவும் சிறப்பாக கொண்டாடப்பட்டு வருகிறது. அதேபோல் இவ்வாண்டு துலா உற்சவம் கடந்த அக்டோபர் 18ம் தேதி முதல் நாள் தீர்த்தவாரியுடன் தொடங்கியது.
இதில் கடைசி பத்துநாள் உற்சவம் கடந்த 7ம் தேதி திருக்கொடியேற்றத்துடன் தொடங்கியது.இதில் முக்கிய நிகழ்ச்சியாக கடந்த 13ம் தே தி திருக்கல்யாணமும் அதனை தொடர்ந்து நேற்று திருத்தேரோட்டம் நடைபெற்றது. அபயாம்பிகை சமேத மாயூரநாதர் சுவாமி பரிவார மூர்த்திகளுடன் சிறப்பு அலங்காரத்தில் திருத்தே ருக்கு எழுந்தருளினார். மாலை திருவாவடுதுறை ஆதீனம் 24வது குருமகா சன்னிதானம் அம்பலவாண தேசிக பண்டார சன்னதி சுவாமிகள் வடம் பிடித்து திருத்தேரோட்டத்தை தொட ங்கிவைக்க ஆயிரக்கணக்கான பக்தர்கள் வடம் பிடித்திழுக்க திருத்தேரோட்டம் நடைபெற்றது. இதில் திருவாவடுதுறை ஆதீனம் கட்டளை விசாரணை அம்பலவாண தம்பிரான் சுவா மிகள், சுவாமிநாத தம்பிரான் சுவாமிகள், சப்-கலெக்டர் பிரியங்கா பங்கஜம், அறநிலையத்துறை இணை ஆணையர் கஜேந்திரன், சிவபுரம்வேத சிவாகம பாடசாலை நிறுவனர் சாமிநா த சிவாச்சாரியார் உட்பட திரளான பக்தர்கள் கலந்துகொண்டனர். இதுபோன்று வதான்யேஸ்வரர் சுவாமி கோயிலில் தேரோட்டம் நடைபெற்றது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு தேரை வடம் பிடித்திழுத்தனர். முக்கிய விழாவான கடைமுக தீர்த்தவாரி விழா இன்று 16ம் தேதி மதியம் 1 மணியளவில் நடைபெறுகிறது. நாளை 17ம் தேதி முடவன் மு ழுக்கு உற்சவமும் நடைபெறுகிறது.