பதிவு செய்த நாள்
16
நவ
2017
12:11
காஞ்சிபுரம் : காமாட்சி அம்மன் கோவில் உண்டியலில், 39 லட்சம் ரூபாய், பக்தர்கள் காணிக்கையாக கிடைத்துள்ளது. காஞ்சிபுரம் காமாட்சி அம்மன் கோவிலுக்கு, வெளி மாவட்டங்களில் இருந்தும், பிற மாநிலங்களில் இருந்தும் பக்தர்கள் வருகின்றனர்.அவர்கள், காணிக்கையாக செலுத்தும் உண்டியல் பணத்தை, மூன்று மாதங்களுக்கு ஒரு முறை, கோவில் நிர்வாகிகள் திறந்து எண்ணுவர்.நேற்று முன்தினம் காலை, செயல் அலுவலர் விஜயன் மற்றும் கோவில் நிர்வாகிகள் முன்னிலையில், கோவில் உண்டியலை திறந்து, காணிக்கை பணம் எண்ணப்பட்டது.இதில், 39.03 லட்சம் ரூபாயும்; 175 கிராம் தங்கமும், 340 கிராம் வெள்ளி கிடைத்தது.