Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
 

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
 

4. சம்மோஹன சாஸ்தா 4. சம்மோஹன சாஸ்தா 6. வீர சாஸ்தா 6. வீர சாஸ்தா
முதல் பக்கம் » அஷ்ட சாஸ்தா தரிசனம்
5. சந்தான பிராப்தி சாஸ்தா
Share
எழுத்தின் அளவு:
Temple images

பதிவு செய்த நாள்

12 டிச
2011
15:52

மூர்த்தி வர்ணனை: மிகவும் அடர்த்தியானதும் பரவுகின்றதுமான அழகான கூந்தலை உடையவரும், சிம்மாசனத்தில் அமர்ந்து இருப்பவரும், காது குண்டலங்கள் நன்றாகப் பிரகாசிக்கின்ற ஒளிமயமான பூர்ஜ இலையினுடைய காந்தியுடன் கூடியவரும், இரண்டு தோள் பட்டைகளும் மிகவும் சக்தி உடையதாகவும், நீல வண்ணப்பட்டு வஸ்திரத்தை உடுத்தியவரும், புதிய மேகத்தின் கருமையை உடையவரும் ப்ரபா (என்ற மனைவி), ஸத்யகன் (என்ற செல்லப் பிள்ளை) இருவரையும் இருபக்கங்களிலும் இருத்திக் கொண்டுள்ளவரும், மங்களகரமான சிவப்புத் தன்மையை உடையவருமான ஆர்யன் (ஆர்யகன்) என்ற பெயர் பெற்றவரை (ஸ்ரீ சாஸ்தாவை) தியானிக்கிறேன்.

ப்ரபா வர்ணனை : ப்ரபை என்ற இவர் (சாஸ்தாவின்) மனைவி; சிவந்த புஷ்பங்களால் அலங்கரித்துக் கொண்டிருப்பவள். அழகு மிக்கவள்; அழகிய யௌவனம் உடையவள்; சிவந்த கடைக்கண்கள் கொண்டவள்; வீணை ஏந்திய கையினள்.

ஸத்யகன் வர்ணனை: ஸத்யகன் என்ற இவர் சாஸ்தாவின் புதல்வன். நீலமேக ச்யாமள வர்ணன்; மங்கள ஸ்வரூபி; மஞ்சள் நிறம் கொண்ட அணிகளால் அழகியவன் என்று வர்ணிக்கப்படுகிறார்கள்.

ஹரிஹர புத்திரரான சாஸ்தாவை மும்மூர்த்திகளின் அம்சம் என்றும் கூறுவதுண்டு. சிவபெருமான், சாஸ்தா அவதரித்தவுடன், குழந்தாய்! நானும், விஷ்ணுவும், பிரம்மனும் உன் உருவாய் அவதரித்திருக்கிறோம் என்று பாராட்டியதாக-

த்வத் ரூபேணாவதீர்ணாஸ்ம
ப்ரஹ்மாவிஷ்ணுரஹம் ஸுத

என்று ஸ்காந்த புராணத்திலுள்ள கோடிருத்ர ஸம்ஹிதையிலிருந்து தெரிகிறது.

மேலே கூறிய கருத்துக்களின்படி, ஹரி-ஹர சக்திகளான லக்ஷ்மியும், துர்கையும் பூர்ணா-புஷ்களாவாக ஐயனை அலங்கரிக்கின்றன. பிரம்மனும் இணைந்து மும்மூர்த்திகளின் அம்சமாக சாஸ்தாவை தியானிக்கும் போது, பிரம்மனது சக்தியாம் ஸரஸ்வதியானவள் பிரபா என்ற பெயரில் ஸ்ரீ மஹா சாஸ்தாவை காந்தர்வ முறையில் மணந்து கொண்டு ஸத்யகன் என்ற செல்லப்பிள்ளையுடன் கொலுவிருப்பதாக நமது புராணங்கள் கூறுகின்றன. கல்லிடைக்குறிச்சி, கொச்சி, நூறணி போன்ற பல இடங்களிலும் நடைபெற்று வரும் சாஸ்தா ப்ரீதியில் செல்லப்பிள்ளைக்கு ஒரு தனி ஸ்தானம் உண்டு. மேலே கூறிய ஆதாரங்களின் அடிப்படையில் தான் இந்த சாஸ்தா விக்ரஹம் அமைக்கப்பட்டுள்ளது. சாஸ்தாவின் எட்டு அவதாரங்களில் ஒன்றாக இது கருதப்படுகிறது.

இதுவரை சந்தான தாயகராக சங்கல்பம் செய்து கொண்டது ஏன்? சிவ புத்ரர்களான மஹா கணபதிக்கும் முருகனுக்கும் புத்ர ஸந்தானம் இருப்பதாகக் கூறப்படவில்லை. மாறாக, சாஸ்தாவிற்கு ஸத்யகன் என்ற செல்லப்பிள்ளை அவதரித்திருப்பதிலிருந்தே வம்ச வ்ருத்தி செய்யக்கூடியவர் சாஸ்தா என்பது புலனாகிறது. இரண்டு ஆண்மூர்த்திகளுக்கு அதிசயமான அவதாரமாக அவதரித்த ஹரிஹரபுத்திரனை பிரம்மச்சாரியாக (ஐயப்பனாக) உலகமே வழிபடும் போது, அந்த சாஸ்தாவைக் கல்யாண கோலத்தில் கண்டதுமின்றி குழந்தையுடனும் இருப்பதாக தியானிக்கும் போது இது ஒரு விசேஷமான அனுக்ரகமூர்த்தி என்று உணரலாம்.

ஸ்ரீ பூதநாத கராவலம்பத்தில்

ஸம்பூர்ண பக்த வர ஸந்ததி தான சீல என்று வருகிறது. ஸ்ரீ மஹா சாஸ்தாவின் மூலமந்திரத்திலும் புத்ரலாபாய என்று வருகிறது. சங்கீத மும்மூர்த்திகளில் ஒருவரான ஸ்ரீ முத்துஸ்வாமி தீக்ஷிதரின் க்ருதியில் ப்ரார்த்தித புத்ர ப்ரதம் என்று பகவானைப் பாடுகிறார். புத்திரனுடன் இருக்கின்ற ஒரு மூர்த்தி புத்திரப்பேறு அருளும் உபாஸனா மூர்த்தியாக துதிக்கப்படுவது சாலப்பொருத்தமே.

சிவபெருமானை சோமாஸ்கந்தராக வழிபடுவது போல சாஸ்தாவையும் ஸத்யகனுடன் சேர்த்து வழிபடும் போது சந்தான பிராப்தி நாயகரே! சரணமய்யப்பா! என்று பிரார்த்தனைக்கு ஒரு தனி பலம் கூடும் என்பது நம் நம்பிக்கை. எனவே இது ஒரு சங்கல்ப மூர்த்தியே.

ப்ரபா ஸத்யகனுடன் வீற்றிருக்கும் சாஸ்தாவின் தியான ஸ்லோகம் :

ஸ்னிக்தாரால விஸாரி குந்தலபரம் ஸிம்ஹாஸனாத்யாஸினம்
ஸ்பூர்ஜத் பத்ரஸு க்லுப்த குண்டல மதேஷ் விச்வாச ப்ருத்தோர்யுக்ம
நீல öக்ஷளமவாஸம் நவீன ஜலத்ச்யாமம் ப்ரபா ஸத்யகா
ஸ்பாயத் பார்ச்வயுகம் சுரக்த ஸகலா கல்பம் ஸ்மரேத் ஆர்யகம்.

வாசனைத் தைலம் பூசப்பட்ட அடர்ந்த கேசத்தையுடையவரும், கர்ண பத்ர குண்டலங்கள் மின்னும் இரு திருக்காதுகளை உடையவரும், நீலப்பட்டாடை உடுத்தவரும், ஸ்ரீ ப்ரபாதேவி என்ற பத்தினியும், ஸத்யகன் என்ற திருப்புதல்வனும் இருபுறமும் சூழ சிம்மாசனத்தில் வீற்றிருக்கும் ஆரியரை (சாஸ்தாவை) நினைவில் நிறுத்துகிறேன். இந்த தியான ஸ்லோகம் ஸ்ரீசாஸ்துர் ஸ்தவராஜ ஸ்தோத்திரத்தில் உள்ளது.

 
மேலும் அஷ்ட சாஸ்தா தரிசனம் »
temple
சாஸ்தா பற்றி கந்த புராணத்தில் கூறப்பட்டுள்ள தகவல்: முன்னொரு காலம். தேவர்களைச் சிறையிலிட்டு சூரபதுமன் ... மேலும்
 
temple

சாஸ்தா வழிபாடு! டிசம்பர் 12,2011

அஷ்டசாஸ்தா வழிபாடு யுகம் கடந்த புருஷனாக விளங்குபவர் சாஸ்தா. கிருதயுகத்தில் கந்த புராணக் கூற்றுப்படி, ... மேலும்
 
temple
ஹரிக்கும் ஹரனுக்கும் மகனாகப் பிறந்தவர் ஐயப்பன். அதாவது காக்கும் தொழிலையும், அழித்தல் தொழிலையும் ... மேலும்
 
temple
சிதம்பர ரகசியத்தில் குஹ்யரத்ன சிந்தாமணி எனும் அபூர்வமான ஸ்தோத்திரத்தில் ஸாக்ஷõத் ஸ்ரீ பரமேச்வரனால் ... மேலும்
 
temple

3. மஹா சாஸ்தா டிசம்பர் 12,2011

ஓம் மஹா சாஸ்த்ரே நமஓம் மஹாசாஸ்தாவே போற்றி! மஹாசாஸ்தா என்ற சொற்றொடர் ஸ்ரீ சாஸ்தாவின் மூல ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Copyright © 2021 www.dinamalar.com. All rights reserved.