Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news 1. ஆதி ஸ்ரீ பூத நாதன் 3. மஹா சாஸ்தா 3. மஹா சாஸ்தா
முதல் பக்கம் » அஷ்ட சாஸ்தா தரிசனம்
2. கல்யாண வரதர் (ஐயப்பன்)
எழுத்தின் அளவு:
Temple images

பதிவு செய்த நாள்

12 டிச
2011
03:12

சிதம்பர ரகசியத்தில் குஹ்யரத்ன சிந்தாமணி எனும் அபூர்வமான ஸ்தோத்திரத்தில் ஸாக்ஷõத் ஸ்ரீ பரமேச்வரனால் பார்வதி தேவிக்கு உபதேசிக்கப்பட்டதாக ஸ்ரீ மஹா சாஸ்தாத்ரிசதீ அமைந்திருக்கிறது. இது ஸ்ரீ ஹரிஹர புத்திர மூலமந்த்ர எழுத்துக்களின் வரிசையில் அமைந்து, ஸ்ரீ லலிதா த்ரிசதியைப் போல் சிறந்து விளங்குகிறது. மேற்கண்ட த்ரிசதியில் ஸ்ரீ மஹா சாஸ்தா கல்யாணவரதராக கீழ்க்கண்டவாறு தியானிக்கப்படுகிறார்.

தியானம்

பூர்ணா புஷ்கலயோ: பதிம்சிவஸுதம்
தண்டாஸி சூலாப்ஜயுக்
சக்ரேஷ்வாஸ சராபயேஷ்ட குலிசான்
ஹஸ்தைர் வஹன் ஸாதரம்
நாநாரத்ன விசித்ரிதாஸன கதம்
கல்யாண ஸித்திப்ரதம்
வீராதி ப்ரமுகை: ஸுஸேவிதபதம்
சாஸ்தாரமீட்யம் பஜே

(பூர்ணா புஷ்கலைகட்குப் பதியும், சிவஸுதனும், தனது பத்துக்கைகளில் தண்டம், கத்தி, சூலம். சங்கம், சக்ரம், வில், அம்பு, குலிசம் ஆகிய ஆயுதங்களுடன், அபய வரதங்களை ஏந்தியவனும், அனேகரத்னங்களாலிழைக்கப்பட்ட ஆஸனத்தில் மர்ந்தவனும், வீரன் முதலிய பரிவாரங்களால் வணங்கப்பட்ட தனது பாதாம்புஜத்தை உடையவனும், ஸர்வ மங்களங்களையும் அருள்பவனுமான போற்றத் தகுந்த சாஸ்தாவை தியானிக்கிறேன்.

தடைப்பட்ட திருமணங்கள், மங்கள வைபவங்கள் யாவும் இவர் அனுக்ரஹத்தால் தடைகள் நீங்கி உடனே நடைபெறும் என்று பலச்ருதி கூறுகிறது.

சாஸ்தா பிரதிஷ்டா விதி

கொச்சி ராஜ்யத்தை ஆண்டு வந்த பிஞ்சகன் எனும் மன்னன் ஓர் சமயம் வேட்டையாடும் நிமித்தம் வனம் சென்றிருந்தபோது, அந்தி சாய்ந்து இருள் சூழ்ந்திட, திரும்பிச்செல்லும் வழி தெரியாது தவித்து நின்றான். அதுசமயம் வனத்தில் திரியும் பூத பிசாசு கணங்கள் மன்னனைத் துன்புறுத்தத் தொடங்க, மன்னன் நடுங்கி பூதநாதனை தியானித்தான். அபய குரல் கேட்டு அடியார் குறை தீர்க்க விரைந்து வரும் ஹரிஹரசுதன், மன்னனை பூத கணங்களிடமிருந்து விடுவித்துக் காத்து அருளினான். மனமகிழ்ந்த அரசன், அதிரூபவதியான தன் குமாரி பூர்ணாவை மனைவியாக ஏற்றுக் கொள்ளுமாறு ஐயனை வேண்டினான் ஐயனும் இசைவுடன் பூரணையை கடி மணம் புரிந்து கொண்டான்.

புஷ்களையை மணந்த ஐயன், பிறகு பூர்ணாவையும் மணந்து கொண்டதை அறிந்து சினந்த பளிஞன், மனிதர்களைப் போல நடந்துகொண்ட நீயும் ஓர் மனிதனாகப் பிறந்து பிரம்மச்சாரியாக இருக்கக்கடவது என்று சபித்தான். அதையே ஓர் வரமாக ஏற்றுக்கொண்டு பகவான் மணிகண்டனாக அவதரித்து சபரிமலையில் பிரம்மசர்ய விரதம் பூண்டிருப்பதாகவும் கதைகளில் கூறப்படுகிறது.
 
ஸ்காந்த புராணத்திலே பூரணா புஷ்களா

ஸத்ய பூர்ணாஹ்வயஸ்யாஸ்தாம் மஹர்ஷேர்நேத்ரயே ரூபே
பூர்ணாபுஷ்கள காக்யாஜே புரா புண்யமிதம்வ்ரதம்
சரித்வா கன்யகே பத்ன்யௌ மஹாசாஸ்துர் பபூவது:

சங்கர ஸம்ஹிதையில் உள்ள உபதேச காண்டத்தில் பூர்ணா புஷ்களா இருவரும் ஸத்ய பூர்ணர் என்ற மஹரிஷியின் கண்களினின்றும் தோன்றியவர்கள் என்று கூறப்பட்டு இருக்கின்றது. அவர்கள் கல்யாணம் என்ற விதரமிருந்து அதன் காரணமாக சாஸ்தாவை மணந்து கொள்ளும் பேறு பெற்றனர் எனத் தெரிகின்றது. (ஆகவே விஷ்ணுவின் கண்களிலிருந்து பிறந்த அமிர்தவல்லி, சுந்தரவல்லி இருவரும் முருகனை பர்த்தாவாய் அடைய தவம் செய்து முருகன் ஆணையால் வேடனிடத்திலும் இந்திரனிடத்திலும் வளர்ந்து முருகனை மணந்து கொண்டதுபோல் ஸத்யபூர்ண மஹரிஷியின் பெண்களாய் பூர்ணா, புஷ்களை நேபாள மன்னனிடமும் வஞ்சி மன்னனிடமும் வளர்ந்து சாஸ்தாவை மணந்திருக்கலாமோ என்று தோன்றுகின்றது.

பிரம்மாண்ட புராணத்தின்படி உபேந்திரனுடைய தங்கை பூரணா என்றும் அவளை சாஸ்தா சித்ரா பவுர்ணமியன்று திருமணம் புரிந்து கொண்டார் என்றும் கூறுகிறார்கள். வேறு சில நூல்களில், காஞ்சிபுரத்தை ஆண்டுவந்த சிவபாலன் என்னும் அரசனுடைய குமாரி பூர்ணா என்றும் திருமணம் காஞ்சி ÷க்ஷத்திரத்தில் நடைபெற்றது என்றும் கூறப்படுகிறது. ஆரியாங்காவில் வேறோர் கதை கூறப்படுகிறது. மதுரையைச் சேர்ந்த சௌராஷ்ட்ரா வம்சத்தை (பட்டு நூல்காரர்கள் இனம்) சார்ந்த ஒர் துணி வியாபாரி தன் மகளுடன் வியாபார நிமித்தம் ஆரியங்காவைக் கடந்து செல்லும்போது வழியில் புஷ்பவதியாகிவிட்ட பெண்ணை ஆரியங்காவு அர்ச்சகரிடம் ஒப்படைத்து விட்டுச் சென்றான் என்றும், அவன் திரும்பி வருவதற்குள், ஓர்நாள் வனத்துக்குள் சென்ற பெண் திரும்பிவராமல் போய் விட்டாள் என்றும் அவளைத்தான் ஏற்றுக்கொண்டு மணந்துவிட்டதாக மனமுவந்து இறைவனே சாக்ஷி சொல்லியதாகவும் கூட இந்த கதையில் கூறுகிறார்கள்.

சபரிமலையில் பந்தளராஜன் ஸ்ரீதர்ம சாஸ்தாவைப் பிரதிஷ்டை செய்ய விரும்பியபோது, பரசுராமர், வெவ்வேறு நிலைகளில் அமர்ந்துள்ள சாஸ்தாவின் வடிவங்களைக் காட்டி, அப்பா! பல்வேறு கல்பங்கள், அதில் பல்வேறு மன்வந்திரங்கள்; அதில் பலவாறான யுகங்கள்; அந்த யுகங்களுக்குப் பலபாதங்கள் என்ற காலக்கணக்கில் எவ்வளவோ சந்தர்ப்பங்களில் துஷ்டர்களை அழித்து சிஷ்ட பரிபாலனம் செய்வதற்காக சாஸ்தா பலமுறை அவதாரம் செய்து லீலைகள் புரிந்துள்ளார். அந்தப் பல்வேறு அவதாரங்களில் உள்ள இந்தநிலைகளில், உனக்கு பிடித்தமான கோலத்தை தேர்ந்தெடுத்து அந்த வடிவில் இறைவனைப் பிரதிஷ்டை செய்வாயாக என்று கூறினாராம். அதன்படி அவற்றில் ஓர் நிலையைத் தான் நாம் சபரிமலையில் தரிசிக்கிறோம்.

பகவானுடைய திருக்கல்யாணம் என்றால் என்ன? பரமாத்மாவும், ஜீவாத்மாவும் இணைவதே இறைவனது திருக்கல்யாண லீலையாகும், பரமாத்மாவான பகவானிடம், ஜீவாத்மாக்கள் ஆகிய நாம் இரண்டறக் கலக்கும் ஆனந்த நிலையே திருக்கல்யாணம், பரமாத்ம ஜீவாத்ம ஸங்கமத்திற்கு ராதாமாதவ ப்ரேமை சிறந்த எடுத்துக் காட்டாகும். சாதாரண மனிதர்களின் அறிவுக்கு எட்டாத பெரும் தத்துவங்களைச் சுவையான சம்பவங்களைக் கோர்த்து, சிருங்கார ரஸம் சேர்த்து, பிரேமை பாவத்தில் நாமஸங்கீர்த்தனம் மூலமாக வெளிப்படுத்துவதே தெய்வத் திருமணங்களின் குறிக்கோளாகும். அதையேதான் சாஸ்தா கல்யாணத்திலும், சபரிமலை யாத்திரையிலும் நாம் காணவேண்டும்.

சபரிமலை செல்லும் பக்தர்கள், தேங்காயை தமது உடற் கூடாகவும், நெய்யை தமது ஆத்மாகவும் கருதி அதில் நிறைத்து நெய்த் தேங்காயை சுமந்து சென்று, சபரிமலையில் உடலாகிய தேங்காயை உடைத்து உள்ளிருக்கும் ஆன்மாவாகிய நெய்யை பரமாத்மா மீது அபிஷேகம் செய்யும்போது அங்கு ஜீவாத்மபரமாத்மா ஸங்கமம் ஏற்படுகிறது. தூய்மையாக ஒருமண்டல காலம் விரதமிருந்து இறைவனை அடையும் ஞானமார்க்கம் இது. சபரிமலை செல்ல இயலாதவர்களும் கூட இறைவனை அடைய பக்திமார்க்கத்தின் மூலம் அடைவதே சாஸ்தா கல்யாண உத்ஸவமாகும். பரமாத்மாவை நாயகனாகவும் ஜீவாத்மாவை நாயகியாகவும் ஸங்கல்பித்து, நாயகனை அடைய விரும்பும் நாயகி, இறைவன் மீது காதலாகிக் கசிந்து கண்ணீர் பெருக்கி, அவனை அடைய பல்வேறு தூதுகள் விட்டு, முடிவில் தன்னுள் இருக்கும் குண்டலினி சக்தியையும் எழுப்பி, ஜீவாத்மா எனும் கிளியையும் தூதுவிட்டு இறைவனை அடைந்து இரண்டறக் கலப்பது பக்தி மார்க்கம் ஆகும்.

இருமடந்தையர் மருவ நின்றருள் முருகவேளை அலங்கரிக்கும் தெய்வயானை ஞானமார்க்கம். சாஸ்தாவின் இருபுறமும் கொலுவிருக்கும் தேவியரில் புஷ்கலா ஞானமார்க்கம், பூர்ணா பக்திமார்க்கம் ஆகும். நம்முடலில் விளங்கும் இடா, பிங்களா என்ற இரு நாடியில் பூர்ணா, புஷ்கலா எனும் தேவியர் வஸிக்க நடுவில் ஸுஷும்னா நாடியில் சாஸ்தா விளங்கி இருநாடிகளும் அதை அலங்கரிக்கின்றன. ஹரியும் ஹரனும் தங்களது அம்சங்களில் ஓர் பகுதியை ஒருங்கிணைத்து ஹரிஹரசுதன் அவதரித்தார். அந்த ஹரிஹரனது தேவியராம் துர்க்கையும் லக்ஷ்மியும் தங்கள் அம்சங்களை முறையே புஷ்கலா பூர்ணா வெளிப்படுத்தி இறைவனை அலங்கரிக்கின்றனர். பூர்ணா உபேந்திரனது தங்கையாதலால் வைஷ்ணவியாகிறாள். நாகம் அணிந்துள்ள புஷ்களா துர்கா அம்சமாகக் கருதப்படுகிறாள்.

சாஸ்தாவை மும்மூர்த்திகளின் அம்சம் என்றும் கூறுவதுண்டு. சிவபெருமான், சாஸ்தா அவதரித்தவுடன், குழந்தாய், நானும் விஷ்ணுவும் பிரமனும் உன் உருவாய் அவதரித்திருக்கின்றோம், என்று பாராட்டியதாக

த்வத் ரூபேணாவதீர்ணாஸ்ம: ப்ரஹ்மா
விஷ்ணுரஹம் ஸுத

என்று ஸ்காந்த புராணத்திலுள்ள கோடிருத்ர ஸம்ஹிதையிலிருந்து தெரிகின்றது.

மேலே கூறிய கருத்துப்படி. ஹரிஹர சக்திகள் பூர்ணாபுஷ்களாவாக ஐயனை அலங்கரிக்கின்றன. பிரமனும் இணைந்து, மும்மூர்த்திகளின் அம்சமாக சாஸ்தாவை தியானிக்கும்போது, பிரமனது சக்தியாம் சரஸ்வதியானவள் பிரபா என்ற பெயரில் ஸ்ரீ மஹா சாஸ்தாவை மணந்துகொண்டு, சத்யகன் என்ற செல்லப் பிள்ளையுடன் கொலு விருப்பதாக சில்ப ரத்னம் என்ற நூலில் கூறப்படுகிறது.

சில்ப ரத்னம் என்ற நூலில்

இவர் அழகிய பரந்த அளகம் நிறைந்த சிரத்தினர்; குண்டலங்கள் ஒளிரும் காதுடையவர்; ஒரு கையில் வில்லும், மற்றொரு கையில் அம்பும் வைத்திருப்பவர்; நீலப்பட்டுத் தரித்து, புதிய நீருண்ட மேகம் போன்ற மேனியராய் பிரபை என்ற மனைவியையும் சத்யகன் என்ற பிள்ளையையும் பக்கத் தமர்த்திய கோலத்துடன் சிம்மாஸனத்தில் வீற்றிருப்பார்; சிவப்பு நிற ஆபரணங்கள் அணிந்திருப்பார் என்று வர்ணிக்கின்றது. அத்துடன் பிரபை என்ற இவர் மனைவி சிவந்த புஷ்பங்களால் அலங்கரித்துக் கொண்டிருப்பாள், அழகு மிக்கவள், அழகிய யௌவனம் உடையவள், சிவந்த கடைக்கண்கள் கொண்டவள், வீணை ஏந்திய கையினள் என்று வர்ணிக்கப்படுகின்றாள். சத்யகன் என்ற இவர் புதல்வன் நீலமேக ச்யாமளவர்ணன். மங்கள ஸ்வரூபி, மஞ்சள் நிறங்கொண்ட அணிகளால் அழகியவன், நாணேற்றிய வில்லைக் கையில் வைத்திருப்பவன் என்று வர்ணிக்கப்படுகிறார்.

பிரபாவதியை சாஸ்தா காந்தர்வ விவாஹம் செய்து கொண்டதாகக் கூறப்படுகிறது. நாம் சாஸ்தாவைப் ஹரிஹர அம்சங்களின் ஸமஷ்டியாக மட்டுமே தியானித்து பூஜிப்பதால், பூர்ணபுஷ்களா தேவியரை மட்டுமே ஐயனது இரு சக்திகளாக ஸங்கல்பித்து கல்யாணோற்ஸவம் நடத்தப்படுகிறது.

லலிதா ஸஹஸ்ரநாமத்தில் வரும் பூர்ணா என்ற நாமத்துக்கு எங்கும் வியாபித்து இருப்பவள் என்றும் புஷ்கரா என்ற நாமத்திற்கு எங்கும் நிறைவாகி இருப்பவள் என்றும் பொருளாம். அங்கிங்கெனாதபடி எங்கும் பிரகாசமாய், காந்தமலை ஜோதியாய் பகவான் எல்லா இடத்திலும் பூரணமாகவும் புஷ்களமாகவும் விளங்குகின்றான் என்றும் கொள்ளலாம். இப்படி பல்வேறான தத்துவங்கள் சாஸ்தா கல்யாணத்தில் அடங்கியுள்ளன.

இனி, சாஸ்தா கல்யாணம் எங்கு நடந்தது என்பதைப் புராணங்களில் மாறுபாடாகக் காண்கிறோம். எனவே, இராமன் இருக்குமிடம் அயோத்தி என்பது போல பகவான் இருக்கும் இடம் காந்தமலை என்று கருதி, திருமணம் எங்கு நடந்திருந்தாலும் அது காந்தமலையில் நடந்ததாகவே ஸங்கல்பம் செய்து கொள்ளவேண்டும். கைலையின் ஒர் பகுதியே காந்தமலை ஆகும். கைலையில் பார்வதி பரமேச்வரர் திருமணம் நடந்தபோது, தென்புலத்தில் தனித்து நின்ற அகத்தியருக்குப் பொதிகைமலைச் சாரலில், (பாபநாசத்தில்) ஈசன் எழுந்தருளித் தனது கல்யாண கோலத்தைக் காட்டி யருளினார். அதே பொதிககைமலைச் சரிவில் அமைந்துள்ள சொரி முத்தையனார் கோயிலில் பூர்ணாபுஷ்களா ஸமேதராக சாஸ்தா எழுந்தருளியிருப்பதும், சாஸ்தா பிரதிஷ்டை மற்றும் பூஜாவிதிகளில் அகத்தியரே குருவாக அமைந்திருப்பதும் இங்கு குறிப்பிடத்தக்கது.

ஸ்வாமியே! சரணமய்யப்பா,
ஸத்குருநாதனே! சரணமய்யப்பா!
பூர்ணாபுஷ்களா காந்தனே! சரணமய்யப்பா!

 
மேலும் அஷ்ட சாஸ்தா தரிசனம் »
temple news
சாஸ்தா பற்றி கந்த புராணத்தில் கூறப்பட்டுள்ள தகவல்: முன்னொரு காலம். தேவர்களைச் சிறையிலிட்டு சூரபதுமன் ... மேலும்
 
temple news

சாஸ்தா வழிபாடு! டிசம்பர் 12,2011

அஷ்டசாஸ்தா வழிபாடு யுகம் கடந்த புருஷனாக விளங்குபவர் சாஸ்தா. கிருதயுகத்தில் கந்த புராணக் கூற்றுப்படி, ... மேலும்
 
temple news
ஹரிக்கும் ஹரனுக்கும் மகனாகப் பிறந்தவர் ஐயப்பன். அதாவது காக்கும் தொழிலையும், அழித்தல் தொழிலையும் ... மேலும்
 
temple news

3. மஹா சாஸ்தா டிசம்பர் 12,2011

ஓம் மஹா சாஸ்த்ரே நமஓம் மஹாசாஸ்தாவே போற்றி! மஹாசாஸ்தா என்ற சொற்றொடர் ஸ்ரீ சாஸ்தாவின் மூல ... மேலும்
 
temple news

4. சம்மோஹன சாஸ்தா டிசம்பர் 12,2011

தேஜோமண்டல மத்யகம் த்ரிணயனம் திவ்யாம் பராலங்க்ருதம்தேவம் புஷ்ப ஸரேக்ஷúகார்முக லஸந் மாணிக்ய ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2024 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar