Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
 

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
 

2. கல்யாண வரதர் (ஐயப்பன்) 2. கல்யாண வரதர் (ஐயப்பன்) 4. சம்மோஹன சாஸ்தா 4. சம்மோஹன சாஸ்தா
முதல் பக்கம் » அஷ்ட சாஸ்தா தரிசனம்
3. மஹா சாஸ்தா
Share
எழுத்தின் அளவு:
Temple images

பதிவு செய்த நாள்

12 டிச
2011
15:38

ஓம் மஹா சாஸ்த்ரே நம
ஓம் மஹாசாஸ்தாவே போற்றி!

மஹாசாஸ்தா என்ற சொற்றொடர் ஸ்ரீ சாஸ்தாவின் மூல மந்திரத்திலுள்ளது. ஸ்ரீ சக்ரார்ச்சன தீபிகா என்ற நூலில் உள்ளபடி மந்திர விதி கீழே கொடுக்கப் பட்டுள்ளது.

கல்ஹாரோஜ்வல நீல குந்தலபரம் காலாம்புத ச்யாமலம் கர்பூரா
கலிதாபிராம வபுஷம் காந்தேந்து பிம்பானனம்
ஸ்ரீதண்டாங்குச பாச சூல விலயத் பாணிம் மதாந்த த்விபாரூடம்
சத்ரு விமர்தனம் ஹ்ருதி மஹாசாஸ்தாரமாத்யம் பஜே

செங்கழுநீர்ப்பூ சூடிய கறுத்து வளைந்த கேச பாரத்தால் ஜொலிப்பவரும், நீருண்ட மேகம் போல கறுமையான நிறமுடையவரும் பச்சைக் கற்பூரம் பூசிய அழகிய தேகமுடையவரும், சந்திர பிம்பம் போன்ற முக காந்தியுடையவரும், கதை, அங்குசம், பாசம், சூலம் விளங்கும் கரங்களையுடையவரும், மதங்கொண்ட யானை மீதேறி வருபவரும், எதிரிகளை அழிப்பவருமாகிய மஹாசாஸ்தாவை மனதில் முதலில் வணங்குகிறேன்.

ஓம் கால நாசன தத்பராய நம
ஓம் யமனை நாசம் செய்யும் கருத்துள்ளவா போற்றி
கால-யமனை, நாசன-அழிக்கும், தத்பர-கருத்துள்ளவன், யம பயமகற்றுபவன்

சாஸ்தா யமனுக்குக் காலில் விலங்கு பூட்டியதைப் பற்றி ஸ்ரீமணிதாஸர்,

கர்த்தனாம் கேமன் என்றும் கண்டிருக்கின்றதொரு
தொண்டனுக்காகவே காலனை விலங்கு பூட்டி
துச்சணம் செய்யாமல் அக்ஷணம் இருத்தியுன்
சொல்லுறுதி கேட்க வைத்தாய்

எனப் பாடியுள்ளார்.

புராணங்களில் பல இடங்களில் சிவபெருமானும், மஹாவிஷ்ணுவும் யமனை (அல்லது யம தூதர்களை) அழித்து பக்தர்களைக் காப்பாற்றிய வரலாறுகள் கூறப்பட்டுள்ளன. தவிரவும், யமனை ஸ்ரீ சாஸ்தாவின் பெயரை உடையோர், அவருடைய பக்தர்கள் முதலியோரைக் கண்டால் அஞ்சுகின்றான். இந்த விஷயம் யமன் தன் தூவர்களிடம் சொல்வதாக ஸ்காந்த மஹாபுராணத்தில் (சிவரஹஸ்ய கண்டம், உபதேச காண்டம், அத்யாயம் 26) கூறப்பட்டுள்ளது.

ச்ருணுஷ்வைகமனா பூத்வா புனர்வாக்யம் மமாதுனா
ஜபந்தி யே மஹாதேவ்யா திவ்யநாமானி ஸந்ததம்

விக்னேச்வரஸ்ய நாமானி ஸ்கந்தஸ்ய ச மஹாத்மன
பைரவஸ்ய ச நாமானி வீரபத்ரஸ்ய தான்யபி

மஹாசாஸ்துச்ச நாமானி நந்தீசஸ்ய கணாக்ரணே
மஹாகாளாதி நாமானி ததைவாஸ்த்ராயுதஸ்ய ச

வ்ருஷபஸ்ய ச நாமானி பக்தானாம் சங்கரஸ்ய ச
ஜபந்தி தே மஹாத்மனோ விப்ரத்யபி நிரந்தரம்

ந தான்ப்ரத்யதிகாரோ ந: பாபஸ்ப்ருஷ்டி விவர்ஜிதான்
த்ருஷ்ட்வா தான் தூரதோ பீத்யா கச்சாமி சிவவல்லபான்

 
மேலும் அஷ்ட சாஸ்தா தரிசனம் »
temple
சாஸ்தா பற்றி கந்த புராணத்தில் கூறப்பட்டுள்ள தகவல்: முன்னொரு காலம். தேவர்களைச் சிறையிலிட்டு சூரபதுமன் ... மேலும்
 
temple

சாஸ்தா வழிபாடு! டிசம்பர் 12,2011

அஷ்டசாஸ்தா வழிபாடு யுகம் கடந்த புருஷனாக விளங்குபவர் சாஸ்தா. கிருதயுகத்தில் கந்த புராணக் கூற்றுப்படி, ... மேலும்
 
temple
ஹரிக்கும் ஹரனுக்கும் மகனாகப் பிறந்தவர் ஐயப்பன். அதாவது காக்கும் தொழிலையும், அழித்தல் தொழிலையும் ... மேலும்
 
temple
சிதம்பர ரகசியத்தில் குஹ்யரத்ன சிந்தாமணி எனும் அபூர்வமான ஸ்தோத்திரத்தில் ஸாக்ஷõத் ஸ்ரீ பரமேச்வரனால் ... மேலும்
 
temple

4. சம்மோஹன சாஸ்தா டிசம்பர் 12,2011

தேஜோமண்டல மத்யகம் த்ரிணயனம் திவ்யாம் பராலங்க்ருதம்தேவம் புஷ்ப ஸரேக்ஷúகார்முக லஸந் மாணிக்ய ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Copyright © 2021 www.dinamalar.com. All rights reserved.