திருக்கழுக்குன்றத்தில், ’ரோப் கார்’ வசதி ஏற்படுத்த கோரிக்கை
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
18நவ 2017 01:11
திருக்கழுக்குன்றம் : திருக்கழுக்குன்றம் வேதகிரீஸ்வரரை வழிபட வரும் பக்தர்கள் வசதிக்காக, ’ரோப் கார்’ எனப்படும், இரும்பு கம்பியில் இணைக்கப்பட்ட பெட்டிகளை இழுக்கும் வசதி வேண்டும் என, கோரிக்கை எழுந்துள்ளது. காஞ்சிபுரம் மாவட்டத்தில், சைவ சமய குரவர்கள் நால்வரால் பாடல் பெற்ற தலமாக திருக்கழுக்குன்றம் வேதகிரீஸ்வரர் கோவில் விளங்குகிறது. இங்குள்ள வேதகிரீஸ்வரரை நான்கு வேதங்களாலும் போற்றப்படுகிறது.சிறப்பு மிக்க இக்கோவில், 500 அடி உயர மலை மீது, 247 ஏக்கர் பரப்பில் அமைந்து உள்ளது. பல இடங்களில் இருந்து பக்தர்கள் வருகின்றனர்.முதியோர் மற்றும் பெண்கள் மலை ஏறி சென்று இறைவனை வழிபடுவதில் சிரமப்படுகின்றனர். கிரிவலம் செல்வோர் மட்டுமே மலை ஏறி இறைவனை வழிபடுகின்றனர். பிறரால், படிகளில் ஏற முடியாத சூழல் ஏற்படுவதாக கூறப்படுகிறது.அறுபடை வீடுகளில் ஒன்றான பழநி தண்டாயுதபாணி கோவிலில் பக்தர்கள் மலையேற, மாற்று வழியில் செல்ல, ’ரோப் கார்’ வசதி உள்ளது. அதே போல, இந்த கோவிலிலும் ரோப் கார் வசதியை ஏற்படுத்த வேண்டும் என, எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.