பதிவு செய்த நாள்
18
நவ
2017
01:11
கோவை: கார்த்திகை மாதம் துவங்கியுள்ளதால் சபரிமலைக்கு செல்லும் பக்தர்களின் எண்ணிக்கை அதிகமாக இருக்கும். எனவே, வரும், 20ம் தேதி முதல், கோவை வழியாக சிறப்பு ரயில்கள் சபரிமலைக்கு இயக்கப்படுகின்றன. அதன்படி, சென்னை எக்மோர் ஸ்டேஷனில் இருந்து கொல்லத்திற்கு வரும், 20ம் தேதி முதல் அடுத்தாண்டு ஜன., 15ம் தேதி வரை சிறப்பு ரயில் இயக்கப்படுகிறது. சென்னை எக்மோரில் இருந்து திங்கட்கிழமை மதியம், 2:45 மணிக்கு புறப்படும் ரயில், அரக்கோணம், காட்பாடி, சேலம், ஈரோடு, திருப்பூர், கோவை வழியாக மறுநாள் காலை, 5:50 மணிக்கு கொல்லம் சென்றடைகிறது. அதேபோல், கொல்லத்தில் இருந்து சென்னைக்கு வரும், 21 முதல் அடுத்தாண்டு ஜன., 9ம் தேதி வரை சிறப்பு ரயில் இயக்கப்படுகிறது. செவ்வாய் தோறும், கொல்லம் ஸ்டேஷனில் இருந்து மதியம், 1:00 மணிக்கு புறப்படும் ரயில் மறுநாள் காலை, 5:30 மணிக்கு சென்னை சென்றடைகிறது. இத்துடன், இரண்டடுக்கு ஏ.சி., வகுப்பு பெட்டி ஒன்று, மூன்றடுக்கு ஏ.சி., வகுப்பு பெட்டிகள் இரண்டு, ஸ்லீப்பர் வகுப்புகள் எட்டு, இரண்டாம் வகுப்பு பொது பெட்டிகள் மூன்றும் இணைக்கப்பட்டிருக்கும் என, தெற்கு ரயில்வே தெரிவித்துள்ளது.