பதிவு செய்த நாள்
18
நவ
2017
02:11
செஞ்சி: செஞ்சி சிறுகடம்பூர் சித்தாஸ்ரமத்தில், பகவான் யோகி ராம்சுரத்குமாரின் மணிமண்டப கும்பாபிஷேகம் நடந்தது. செஞ்சி சிறுகடம்பூர் அன்னை ஓம் பவதாரிணி நகர் சித்தாஸ்ரமத்தில் பகவான் யோகி ராம்சுரத்குமாரின் 100வது ஆண்டு ஜெயந்தி விழாவை முன்னிட்டு, புதிய மணிமண்டபம் கட்டியுள்ளனர். இதன் மகா கும்பாபிஷேகம் நேற்று நடந்தது. இதை முன்னிட்டு நேற்று முன்தினம் சப்தாகம நாமாவளி பஜனை மற்றும் அகண்ட நாம ஜெபமும், மாலை விமான கலச பிரதிஷ்டையும் நடந்தது. நேற்று காலை 7:00 மணிக்கு ஸ்ரீபிரணவானந்த சரஸ்வதி சுவாமிகள் முன்னிலையில் ஜெப ஹோமம், நாடி சந்தானம், பூர்ணாஹூதி, மகா தீபாராதனை நடந்தது.
திருவண்ணாமலை பகவான் யோகிராம் சுரத்குமார் ஆஸ்ரம அறக்கட்டளை வாழ்நாள் அறங்காவலர் நீதிபதி அருணாச்சலம் தலைமையில், காலை 8:25 மணிக்கு மணி மண்டபத்திற்கும், பகவான் யோகிராம் சுரத்குமாரின் சிலா ரூபத்திற்கும் மகா கும்பாபிஷேகத்தை அன்னை ஓம் பவதாரிணி நடத்தி வைத்தார். யோகிராம் சுரத்குமார் அறக்கட்டளை வாழ்நாள் அறங்காவலர்கள் டாக்டர் ராமநாதன், விஜயலட்சுமி, சுவாமிநாதன், ராஜேஸ்வரி, குமரன், ஓய்வு பெற்ற ஐ.ஏ.எஸ்., அதிகாரி வெங்கட்ராமைய்யா, அமுதசுரபி ஆசிரியர் திருப்பூர் கிருஷ்ணன், ஆதிரை பாஸ்கரன், ஓம் பெஸ்ட் வாசுதேவன், புதுச்சேரி தொழிலதிபர் பிரேம்குமார், செஞ்சி தொழிலதிபர் கோபிநாத், திருஞானசம்பந்தம், விழா குழுவினர் டாக்டர் அசோகன், டாக்டர் மகேஸ்வரி, உமா மற்றும் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர். காலை 11:00 மணிக்கு சென்னை சுமதி கிருஷ்ணா இன்னிசை நிகழ்ச்சி நடந்தது.