காஞ்சிபுரம் : காஞ்சிபுரம் திருகச்சியம்பதி விநாயகர் அய்யப்ப பக்தர்கள் சபா சார்பில், 40ம் ஆண்டு விளக்கு பூஜை, காஞ்சிபுரத்தில் நடந்தது. காஞ்சிபுரம் திருக்கச்சியம்பதி விநாயகர் அய்யப்ப பக்தர்கள், சபரி மலைக்கு செல்வதையொட்டி, சபா சார்பில், காஞ்சிபுரம் அஷ்டபுஜம் கோவில் எதிரில், விளக்கு பூஜை நடந்தது.பாடகர் பி.கே.வீரமணிதாசன் குழுவினரின், பக்தி இன்னிசை நிகழ்ச்சி நடைபெற்றது. தொடர்ந்து அன்னதானம் வழங்கப்பட்டது. இரவு, ஜோதி தரிசனம் நடந்தது. ஆயிரக்கணக்கான அய்யப்ப பக்தர்கள் மற்றும் பொதுமக்கள் பங்கேற்றதால், செங்கல்பட்டு செல்லும் சாலையில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. பின், போலீசார் வந்து, போக்குவரத்து நெரிசலை சீர்படுத்தினர்.