பதிவு செய்த நாள்
20
நவ
2017
11:11
திருப்பூர்: திருப்பூர் சாய்பாபா கோவிலில், நேற்று திருவிளக்கு பூஜை மற்றும் சிறப்பு வழிபாடு நடந்தது.வரும், 23ம் தேதி, ஸ்ரீ சத்ய சாய்பாபா பிறந்த தினம். இதற்காக, ஒரு வாரம் ஆன்மிக நிகழ்ச்சி, திருப்பூர், ராம்நகர் சாய்பாபா கோவிலில் நடக்கிறது. முதல் நாளில், திருவிளக்கு பூஜை நடந்தது. உலக நன்மைக்காக, பெண்கள் வழிபாடு நடத்தினர். தொடர்ந்து கூட்டுபஜனை நடந்தது. நிகழ்ச்சியில், இன்று மாலை, 05:00 மணிக்கு வேத பாராயணம்; நாளை, மாலை 05:30 மணிக்கு, சாயி பஜன்; 22 ம் தேதி, கோவை சச்சித் ஆனந்தம் சேசராஜூவின் ஆன்மிக சொற்பொழிவு ஆகியன நடக்கிறது.சாய்பாபா பிறந்த தினத்தன்று, காலை, 05:00 மணி முதல் ஒம்காரம், சுப்ரபாதம், நகரசங்கீர்த்தனம் மற்றும் கணபதி ஹோமம் நடக்கிறது. காலை, 07:30 மணி பிரசாந்தி கொடியேற்றம், 11:00 மணிக்கு அன்னதானம், மாலை, 05:00 மணிக்கு, வேத பாராயணத்துடன் சுவாமியை அழைத்து வருதல் நடக்கிறது.விழா ஏற்பாடு, திருப்பூர் ஸ்ரீ சத்யசாயி சேவா மாவட்ட தலைவர் சிவசுப்ரமணியன் தலைமையில், பக்தர்கள் மேற்கொண்டுள்ளனர்.