பதிவு செய்த நாள்
20
நவ
2017
01:11
திருப்பூர் ;காங்கயம் சிவன்மலை கோவில், கிரிவலப்பாதையில், ‘துளிகள்’ அமைப்பினர் சார்பில், முதல்கட்டமாக, 750 மரக்கன்றுகள், நேற்று நடப்பட்டன. காங்கயத்தில் இருந்து திருப்பூர் ரோடு, சென்னிமலை ரோடு, பழையகோட்டை ரோடுகள் அகலப்படுத்தும் பணி நடந்து வருகிறது. இதற்காக, ரோட்டோரத்தில் இருந்த நூற்றுக்கணக்கான மரங்கள் அகற்ற வேண்டியுள்ளது. இதனால், காங்கயம் நகரத்தில் மரங்கள் எண்ணிக்கை குறையும் நிலை ஏற்பட்டது. இதையறிந்த, காங்கயம் துளிகள் அமைப்பினர், அதிகளவில் மரக்கன்று நட்டு, பராமரிக்க முடிவு செய்தனர். அவ்வகையில், சிவன்மலை கிரிவலப்பாதையில், முதல் கட்டமாக வேம்பு, புங்கன், மகாகனி, மகிழம், அரசு, ஆல் போன்ற, 750 மரக்கன்றுகள் நடப்பட்டது. ஒவ்வொரு மரக்கன்றுக்கும், மரக்கூண்டு அமைத்து பாதுகாப்பு செய்யப்பட்டுள்ளது.