வெளிநாட்டு பயணியர் வருகை திருக்கழுக்குன்றத்தில் அதிகரிப்பு
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
21நவ 2017 12:11
திருக்கழுக்குன்றம்: வேதகிரீஸ்வரர் கோவிலுக்கு, வெளிநாட்டுபயணியர் வருகை அதிகரித்துள்ளது.திருக்கழுக்குன்றத்தில், பல்லவர் கால வேதகிரீஸ்வரர் கோவில், 500 அடி உயரத்தில், மலை மீது அமைந்துள்ளது. ஐந்து ராஜகோபுரங்களுடன் கூடிய தாழக்கோவிலாக, பக்தவத்சலேஸ்வரர் மற்றும் திரிபுர சுந்தரி அம்மன் கோவில்கள் உள்ளன. மாவட்டத்தில் அதிக பரப்புடைய, முதன்மைதீர்த்தமாக சங்கு தீர்த்த குளம் விளங்குகிறது.தமிழகம் மட்டுமின்றி ஆந்திரா, கர்நாடகா என, பிற மாநில பக்தர்கள், இங்கு வருகின்றனர்.இந்நிலையில், வெளி நாட்டு சுற்றுலா பயணியர் வருகையும் அதிகரித்து உள்ளது.இங்குள்ள மலைக்கோவில், தாழக்கோவில், சங்கு தீர்த்த குளம் உள்ளிட்ட பகுதிகளை சுற்றி பார்த்து, வெளிநாட்டு பயணியர் புகைப்படம் எடுத்துச்செல்கின்றனர்.