பதிவு செய்த நாள்
22
நவ
2017
12:11
குன்னூர் : குன்னூர் பாய்ஸ்கம்பெனி அருகே ஒசட்டி திருவள்ளுவர் நகரில் அமைந்துள்ள ருத்ர காட்டேரி அம்மன் கோவிலில், புதிய சிலை அமைக்கப்பட்டு, விநாயகர் கோவில் நிர்மாணிக்கப்பட்டு கும்பாபிஷேகம் நடத்தப்பட உள்ளது. அதற்கான பணிகள் நடந்து வருகின்றன.
வரும், 30ம் தேதி காலை, 6:31 மணிக்கு விக்னேஸ்வரபூஜை, புண்யாக வாசனம், பஞ்சகவ்ய பூஜை, வாஸ்து சாந்தி, மகா தீபாராதனை, பிரசாத வினியோகம், மாலை, 5:30 மணிக்கு முனீஸ்வரர் கோவிலில் இருந்து மேள தாளத்துடன் தீர்த்த குடம் எடுத்து வருதல், இரவு, 9:00 மணிக்கு மேல் சுவாமிகள், கோபுர கலசத்திற்கு ஷயாணாதிவாசம், யந்திரஸ்தாபனம், அஷ்டபந்தன மருந்து சார்த்துதல் ஆகியவை நடக்கின்றன.
டிசம்பர் ஒன்றாம் தேதி காலை, 7:01 மணிக்கு இரண்டாம் கால யாக வேள்வி, மங்கள இசை, புண்ணியாகம், வேதிகா அர்ச்சனை, நாடி சந்தானம், ஸ்பர்சாகுதி, திரவியாகுதி, யந்திரதான சங்கல்பம், மகா பூர்ணாகுதி, தீபாராதனை, கலசங்கள் எடுத்து வருதல், மகா கும்பாபிஷேகம் விழா நடக்கிறது. விழா ஏற்பாடுகளை கோவில் கமிட்டியினர், ஒசட்டி எல்லை திருவள்ளுவர் நகர் பொதுமக்கள் செய்து வருகின்றனர்.