பதிவு செய்த நாள்
22
நவ
2017
12:11
ஓசூர்: ஓசூர் மலை மீதுள்ள சந்திரசூடேஸ்வரர், மரகதாம்பாள் கோவில் உண்டியல் திறக்க ப்பட்டது. இதில், இரண்டு லட்சத்து, 91 ஆயிரத்து, 558 ரூபாய் காணிக்கை இருந்தது.
ஓசூர் மலை மீது சந்திரசூடேஸ்வரர், மரகதாம்பாள் கோவில் உள்ளது. இக்கோவிலுக்கு வரும் பக்தர்கள் காணிக்கை செலுத்த வசதியாக, ஆறு நிரந்தர உண்டியல் மற்றும் நான்கு தற்காலிக உண்டியல் வைக்கப்பட்டுள்ளன. ஆண்டுக்கு, இருமுறை உண்டியல்கள் திறக்கப்பட்டு எண்ணப்படும். கடந்த ஜூன் மாதம் உண்டியல் திறக்கப்பட்ட நிலையில், ஐந்து மாதங்களுக்கு பின், நேற்று, தர்மபுரி இந்து சமய அறநிலையத்துறை உதவி ஆணையர் ஸ்ரீநித்யா, கோவில் செயல் அலுவலர் ராஜரத்தினம் ஆகியோர் தலைமையில், உண்டியல்கள் திறக்கப்பட்டனபள்ளி, கல்லூரி மாணவர்கள், கோவில் ஊழியர்கள் மூலம் காணிக்கை பணம் எண்ணும் பணி மேற்கொள்ளப்பட்டது. இதில், இரண்டு லட்சத்து, 91 ஆயிரத்து, 558 ரூபாய் காணிக்கை இருந்தது.