பதிவு செய்த நாள்
22
நவ
2017
12:11
குமாரபாளையம்: குமாரபாளையத்தில் சித்தி விநாயகர் கோவில் கும்பாபிஷேக விழாவையொ ட்டி தீர்த்தக்குட ஊர்வலம் நடந்தது. குமாரபாளையத்தில், வேதாந்தபுரம், சித்தி விநாயகர் கோவில் கும்பாபிஷேக விழா, நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது.நேற்று அதிகாலை, கணபதி ஹோமத்துடன் முதல் கால யாக சாலை பூஜை நடந்தது.
இதையடுத்து, பவானி சங்கமேஸ்வரர் கோவில் காவிரி ஆற்றிலிருந்து, தீர்த்தக்குட ஊர்வலம் நடந்தது. காளியம்மன் கோவிலில் சிறப்பு பூஜைகள் நடத்தப்பட்டன. இன்று காலை, 7:30 மணியளவில் இரண்டாம் கால யாகம், மாலை, 6:00 மணிக்கு மூன்றாம் கால யாகம், நாளை காலை, 6:00 மணிக்கு நான்காம் கால யாக சாலை வேள்வி நடக்க உள்ளது. கும்பாபிஷேக விழா, காலை, 8:15 மணிக்கு நடக்கிறது. சித்தி விநாயகர் மற்றும் காளியம்மன் கோவில் மண்டபங்களில் அன்னதானம் நடைபெற உள்ளது. நிருத்திய நடேச கலாலயா குழுவினரின் பரதநாட்டிய நிகழ்ச்சி நடக்கிறது. ஏற்பாடுகளை, விழா குழுவினர் செய்து வருகின்றனர்.