Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news புட்டபர்த்தி சத்ய சாய்பாபா பிறந்த ... பிள்ளையார்பட்டி அருகே சித்தர் வாழ்ந்த மலைக்குகை பிள்ளையார்பட்டி அருகே சித்தர் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
இரண்டு மணி நேரத்தில் திருப்பதி ஏழுமலையான் தரிசனம்
எழுத்தின் அளவு:
இரண்டு மணி நேரத்தில் திருப்பதி ஏழுமலையான் தரிசனம்

பதிவு செய்த நாள்

23 நவ
2017
11:11

திருப்பதி: திருமலைக்கு வரும் அனைவரும், இரண்டு மணிநேரத்தில் ஏழுமலையானை தரிசிக்கும் நடைமுறையை, தேவஸ்தானம் அறிமுகப்படுத்த உள்ளது. திருமலைக்கு வரும் பக்தர்கள், ஏழுமலையானை சுலபமாக தரிசிக்க, தேவஸ்தானம் ஏற்பாடுகளை செய்து வருகிறது. விரைவு தரிசன பக்தர்கள், மூத்த குடிமக்கள், கைகுழந்தைகளின் பெற்றோர், மாற்றுத்திறனாளிகள், திவ்யதரிசனம் உள்ளிட்ட பக்தர்களுக்கு, நேர ஒதுக்கீடு முறைப்படி, ஏழுமலையான் தரிசனத்தை, தேவஸ்தானம் வழங்கி வருகிறது. தற்போது, இந்த நேர ஒதுக்கீடு முறையை, தர்ம தரிசன பக்தர்களுக்கும் அறிமுகப்படுத்த தேவஸ்தானம் முடிவு செய்துள்ளது. அடுத்த மாதம்,10 - 12ம் தேதி வரை சோதனை ரீதியில், இம்முறை செயல்படுத்தப்பட உள்ளது. இதற்காக திருமலையில், 21 இடங்களில், 150 கவுண்டர்களை தேவஸ்தானம் ஏற்படுத்தி உள்ளது.

இந்த கவுண்டர்களில், பக்தர்கள், தங்கள் ஆதார் அட்டையை காண்பித்து, டோக்கனை பெறலாம். டோக்கன் பெற, ஆதார் அட்டை கட்டாயம். ஒருமுறை டோக்கன் பெற்ற பக்தர்கள், மீண்டும், 48 மணிநேரம் கடந்த பின் மட்டுமே, டோக்கன் பெற முடியும். அதன் மூலம், தினசரி, 38 ஆயிரம் பக்தர்களுக்கு டோக்கன் வழங்கப்படும். டோக்கனில் குறிப்பிட்டுள்ள நேரத்திற்கு காத்திருப்பு அறைக்கு சென்றால், இரண்டு மணிநேரத்தில் ஏழுமலையானை தரிசிக்கலாம். டோக்கன் பெறாமல், காத்திருப்பு அறையில் காத்திருக்கும் பக்தர்களும், தர்ம தரிசனத்தில் ஏழுமலையானை தரிசிக்க அனுமதிக்கப்படுவர். இதன் மூலம், திருமலைக்கு வரும் அனைத்து பக்தர்களும், இனி நீண்ட நேரம் காத்திருக்காமல், இரண்டே மணிநேரத்தில், ஏழுமலையானை தரிசிக்க முடியும். அடுத்தாண்டு, பிப், மாதம் முதல், இம்முறை முழுமையாக அமல்படுத்தப்பட உள்ளதாக, தேவஸ்தானம் தெரிவித்துள்ளது.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
திருக்கழுக்குன்றம்: திருக்கழுக்குன்றத்தில், சித்திரை பிரம்மோத்சவத்தை முன்னிட்டு, 63 நாயன்மார்கள், ... மேலும்
 
temple news
ராமேஸ்வரம்: 100 சதவீத ஓட்டுப்பதிவு விழிப்புணர்வு ஏற்படுத்திய தாக்கத்தால் ராமேஸ்வரத்தில் பக்தர்கள், ... மேலும்
 
temple news
சென்னை: சைதாப்பேட்டை, சொர்ணாம்பிகை உடனுறை காரணீஸ்வரர் கோவில் சித்திரைப் பெருவிழாவின் மூன்றாம் நாளான ... மேலும்
 
temple news
திருப்புல்லாணி: திருப்புல்லாணி ஆதி ஜெகநாத பெருமாள் கோயிலில், பட்டாபிஷேக ராமர் சன்னதி உள்ளது. ஒவ்வொரு ... மேலும்
 
temple news
உத்தரகாண்ட்: உத்தரகாண்ட் மாநிலத்தில் உள்ள புகழ்பெற்ற பத்ரிநாத் கோவில், இன்று (ஏப்ரல் 23 )காலை 6:15 மணிக்கு, ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar