பதிவு செய்த நாள்
23
நவ
2017
11:11
திருப்புத்துார் பிள்ளையார்பட்டி அருகே சித்தர் வாழ்ந்ததாக கூறப்படும் தொன்மையான மலைக்குகை மற்றும்அதிலுள்ள எழுத்துக்கள், குறியீடுகள் குறித்த தொன்மையை அறிய தொல்லியல் துறையினர் ஆய்வு நடத்த வரலாறு ஆர்வலர்கள் கோரியுள்ளனர். சிவகங்கை மாவட்டம் திருப்புத்துார் பகுதி வரலாறு சிறப்புமிக்கது. கி.பி.5ம் நுாற்றாண்டுக்கு முந்தைய பல தொன்மையான பல குடவரைக் கோயில்கள் நிறைந்த பகுதி.இப்பகுதியில்
பிரபலமாகாத பழமையான இடங்கள் பலஉள்ளன. அதில் பிள்ளையார்பட்டிக்கும்
என்.வைரவன்பட்டி ஊர்களுக்கிடையே உள்ள மலைக் குன்றுகள் நிறைந்த பகுதியாகும். தற்போது கல் குவாரிகளால் பல குன்றுகள் கரைந்து விட்ட நிலையில் ஒரு சிறிய மலைக்குன்றாலான தொடர் மட்டும் சாட்சியாக தற்போதும்உள்ளது. அதில் சில குடவரையிலானதெய்வங்கள் வடக்கு நோக்கி உள்ளன. அது போல மலையின்தெற்குபுறம் ஒரு குகை காணப்படுகிறது. சுமார் 4 அடி விட்டத்திலான வட்ட வடிவ நுழைவுடன் அந்த குகை உள்ளது. தரைமட்டத்திலிருந்து சுமார் 50 அடி உயரத்தில்உள்ளது. 10 அடி நீளமுள்ள அந்த குகையினுள் நுழைந்தால் உள்ளே ஒரு ஆள் நிற்கும் உயரத்திற்குவட்ட வடிவிலான அறை போன்றகூரை அமைப்புடன் உள்ளது.குகைச் சுவர் முழுவதும் பல வடமொழி,பழந்தமிழ்,புரியாத எழுத்துக்கள், குறியீடுகள் புடைப்புக்களாக காணப்படுகிறது.போதிய பாதுகாப்பின்றி உள்ளதால் பார்வையாளர்கள் பலர் அண்மையில் கிறுக்கியுள்ள எழுத்துக்களால் தொன்மையானஎழுத்துக்களை சரியாக பார்க்க முடியவில்லை.
அப்பகுதியில் உள்ள சிலர் கூறியதாவது: இது ஒரு உயிர்மலை. பாண்டவர் மலை என்றும் கூறுவார்கள். இம்மலை சித்தர்கள் நடமாடிய புண்ணிய பூமியாகும்.குறிப்பாக பதினென் சித்தர்களில் ஒருவரான கோரக்க சித்தர் தங்கிய சிறப்பு பெற்றது.பவுத்தத்திலிருந்து சைவராகமாறிய பின் இங்கு வந்திருக்கக் கூடும்.சித்தரியல், போர்க்கலை, சித்த மருத்துவம், யோகம் போன்றவற்றில்தேர்ந்தவர். இவர் பொதுவாக 11ஆம் 12 ஆம் நுாற்றாண்டுகளுக்கு இடையில் வாழ்ந்திருக்கலாம்,இறப்பை வென்றவர்.பழநியில் பாசாண முருகன் சிலை செய்ய போகருக்கு உதவி விட்டுபுதுக்கோட்டை திருக்கோகர்ணமலையில் அல்லது வட பொய்கை நல்லுாரில் சமாதி அடைந்ததாகவும் கூறப்படுகிறது. அந்நிலையில் அவர் இங்கு வந்த சிலகாலம் தங்கியிருந்திருக்கலாம் என்று செவி வழிச் செய்தியாக கூறுகின்றனர்.இந்த தொன்மையான கற்குகையிலிருந்து சுமார் 150 மீட்டர் துாரத்தில் தான்புகழ் பெற்ற கற்பகவிநாயகர் வீற்றிருக்கும் குடவரைக்கோயிலும், சுமார் 30 கி.மீ.,தொலைவில், குன்றக்குடிகுடவரைக் கோயில்களும் உள்ளன. ஆனால் இந்த பழமையான குகை குறித்த சரியான வரலாறு ஆதாரம் ஏதும் தெரியவில்லை. இது ஆதிமனிதர்களால் உருவான குகையா, அல்லது பிற்காலத்தில் குடவரைக் கோயில் அமைப்பதற்கான கைவிடப்பட்ட முயற்சியா என்பது தெரியவில்லை. இக்குகை குறித்து தொல்லியல் துறையின் ஆய்வும்நடந்ததாக தெரியவில்லை. குகையில் செதுக்கப்பட்டுள்ள எழுத்துக்களை, குறியீடுகளை தொல்லியல் துறையினர், கல்வெட்டு ஆய்வாளர்களுடன் ஆய்வுநடத்தி அதன் தொன்மையையும்,வரலாறு சிறப்பையும்அறிய வேண்டியது அவசியமானதாகும்.