Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news சோழவந்தான் ஐயப்ப சுவாமிக்கு ஆறாட்டு ... இறையூர் திரவுபதி அம்மன் கோவிலில் வருஷாபிஷேக விழா இறையூர் திரவுபதி அம்மன் கோவிலில் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
ஸ்தலசயன பெருமாள் கோவிலில் கும்பாபிஷேகம் நடப்பது எப்போது?
எழுத்தின் அளவு:
ஸ்தலசயன பெருமாள் கோவிலில் கும்பாபிஷேகம் நடப்பது எப்போது?

பதிவு செய்த நாள்

25 நவ
2017
11:11

மாமல்லபுரம் : ஸ்தலசயன பெருமாள் கோவிலில், 20 ஆண்டுகள் கடந்தும், கும்பாபிஷேகம் நடத்தப்படாமல் இருப்பது, பக்தர்களை கவலை அடைய செய்துள்ளது. பல்லவ கலைச்சின்னங்களால், சர்வதேச பாரம்பரிய சுற்றுலா இடமாக, மாமல்லபுரம் புகழ்பெற்றது. இது ஒருபுறமிருக்க, 108 வைணவ கோவில்களில், 63வது கோவிலான ஸ்தலசயன பெருமாள் கோவில், இங்கு அமைந்து, ஆன்மிகத்திலும் இவ்வூர் சிறப்பு பெற்றது. ஸ்தலசயன பெருமாள், நிலமங்கை தாயாருடன் வீற்றுள்ளார். ஆண்டாள், ஆழ்வார்கள், ராமர், நரசிம்மர், கருடர், ஆஞ்சநேயர் ஆகியோரும் வீற்றுள்ளனர். விஜயநகர பேரரசர் கிருஷ்ணதேவராயர் ஆட்சியின்போது, இக்கோவில் ஏற்படுத்தப்பட்டது.
 
பக்தர்கள், மகப்பேறு பரிகாரத்திற்கு, தாயாரையும், நில பிரச்னைகளுக்கு, ஸ்தலசயன பெருமாளையும் வழிபடுகின்றனர். தற்போது பக்தர்கள் வழிபடுவது அதிகரிக்கும் சூழலில், தொடர்ந்து கும்பாபிஷேகம் நடத்தப்படாமல் இருப்பது, பக்தர்களை கவலையடைய வைத்துள்ளது. கடந்த, 1998ல், கும்பாபிஷேகம் நடைபெற்றது. அதன்பின் கும்பாபிஷேகம், இதுவரை நடக்கவில்லை; அதற்கான ஏற்பாடுகளும் இல்லை. ஆன்மிக நம்பிக்கையுள்ள பக்தர்கள், இதனால் கவலை அடைந்துள்ளனர்.தற்போது, நன்கொடையாக, 16 கால் மண்டபம் அமைக்கப்பட்டுள்ள நிலையில், கோவில் வளாகம் சுற்றுச்சுவரே இன்றி சீரழிகிறது.மழையின் போது, சுற்றுப்புற பகுதி மழைநீர், வளாகத்தில் தேங்குகிறது. இறைவன் அருளாசி, நமக்கு தொடர்ந்து கிடைக்க வேண்டும். ஒருமுறை நடத்தும் கும்பாபிஷேகம், 12 ஆண்டுகளுக்கே சக்தி அளிப்பதாக ஐதீகம். சக்தியை புதுப்பிக்கவே, தொடர்ந்து கும்பாபிஷேகம் நடத்தி, பயன்பெறுகிறோம். ஏழு ஆண்டுகளுக்கு முன் நடந்திருக்க வேண்டிய கும்பாபிஷேகம், இதுவரை நடக்கவில்லை. கும்பாபிஷேகம் நடத்த, நிர்வாகம் நடவடிக்கை எடுக்கவேண்டும். பக்தர்கள், மாமல்லபுரம்

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
பழநி: பழநி முருகன் கோயில் பங்குனி உத்திர விழாவில் இன்று கிரி வீதியில் தேரோட்டம் நடந்தது.பழநி கோயிலில் ... மேலும்
 
temple news
சபரிமலை: சபரிமலையில் 10 நாட்கள் நடைபெற்ற பங்குனி உத்திர திருவிழா இன்று ஆராட்டுடன் நிறைவு ... மேலும்
 
temple news
கும்பகோணம் : முருக கடவுளின் அறுபடை வீடு கோவில்களில் நான்காம் படை வீடு கோவிலான கும்பகோணம் அருகில் உள்ள ... மேலும்
 
temple news
திருப்பதி: திருமலை சேஷாசலக் காடுகளில் உள்ள புனித யாத்திரைத் தலங்களில் ஒன்றான தும்புரு தீர்த்த ... மேலும்
 
temple news
ராமேஸ்வரம்: பங்குனி உத்தர விழா யொட்டி உலக அமைதிக்காக ராமேஸ்வரம் ராமநாதசுவாமி கோயிலில் 1008 சங்கு ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar