பெண்ணாடம்: பெண்ணாடம் அடுத்த இறையூர் திரவுபதி அம்மன் கோவிலில் வருஷாபிஷேக விழா நடந்தது. இதையொட்டி, நேற்று காலை 9:15 மணியளவில் விக்னேஸ்வர பூஜை, 10:00 மணிக்கு புன்னியாக வாஜனம், 10:30 மணிக்கு கலச பூஜை, 11:00 மணியளவில் வேள்வி பூஜை நடந்தது. தொடர்ந்து, 12:00 மணியளவில் கோவில் வளாகத்தில் உள்ள திரவுபதி அம்மன், விநாயகர், மாரியம்மன் சுவாமிகளுக்கு புனிதநீர் ஊற்றி வருஷாபிஷேகம் நடந்தது. 12:30 மணியளவில் தீபாராதனை நடந்தது. ஏராளமானோர் தரிசனம் செய்தனர்.