பதிவு செய்த நாள்
27
நவ
2017
12:11
சபரிமலை: சபரிமலையில், பக்தர் கள் தங்குவதற்கான, ஆன் லைன் முன்பதிவில் உள்ள குளறுபடிகளை களைய நடவடிக்கை எடுக்கப் பட்டுள்ளதாக, தேவசம் போர்டு தலைவர், பத்மகுமார் தெரிவித்தார்.
கேரளாவில் உள்ள, பிரசித்தி பெற்ற சபரிமலை அய்யப்பன் கோவி லில், மண்டல பூஜை மற்றும் மகரவிளக்கு சீசன் துவங்கியுள்ளது. இதையடுத்து, பக்தர் களுக்கு தேவையான வசதிகளை செய்வது குறித்து, திருவாங்கூர் தேவசம் போர்டு தலைவர், பத்மகுமார், சபரிமலையில் நேற்று கூறியதாவது: சபரிமலையில் பக்தர்கள் தங்குவதற்கு, 560 அறைகள் உள்ளன. இதில், 83 அறைகள் பல்வேறு அரசுத்துறை அதிகாரிகள் தங்குவதற்கு வழங்கப்பட்டுள்ளன. 372 அறைகள், சன்னிதானத்தில் உள்ள, அக்காமடேஷன் சென்டர் வழியாக, நேரடியாக பக்தர்களுக்கு வழங்கப்படுகின்றன. மீதமுள்ள, 105 அறைகள், ஆன்லைன் முன்பதிவுக்காக ஒதுக்கப் பட்டுள்ளன. ஆன்லைன் முன்பதிவு பொறுப்பு, கெல்ட்ரான் நிறுவனத்திடம் ஒப்டைக்கப்பட்டுள்ளது. ஆனால், சில தவறுகள் முன்பதிவில் ஏற்பட்டு வருகிறது. ஒரே அறை இரண்டு பேருக்கு முன்பதிவு செய்ய முடிகிறது. இதை சரி செய்ய கேட்டும், அந்த நிறுவனம் சரி செய்யவில்லை. இது தொடர்பாக முதல் வரிடம் தேவசம்போர்டு புகார் செய்துள்ளது. அவரது ஆலோசனைப்படி, வரும் 28ல், கெல்ட்ரான் அதிகாரிகளுடன், தேவசம் போர்டு அதிகாரிகள் பேச்சு நடத்துவர். கடந்த ஆண்டு மண்டல பூஜைக்காக நடை திறந்த, 10 நாட்களில் அறைகளின் வாடகை வருமானம், 73.86 லட்சமாக இருந்தது.இந்த ஆண்டு, இது, 86.02 லட்சம் ரூபாயாக அதிகரித்துள்ளது. அறை எண்ணிக்கை அதிகரிக்காமல், வாடகை அதிகரிக்காமல் இந்த வருமான உயர்வு ஏற்பட்டுள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.
குமுளியில் இருந்து சத்திரம், புல்மேடு, பாண்டிதாவளம் வழியாக சன்னிதானம் வரமுடியும். தமிழகத்தில் இருந்து,அதிக அளவு பக்தர்கள்இந்த வழியாக வருகின்றனர். காடு பாதையாக இருக்கும் இவ்வழியாக, மகரவிளக்கு காலத்தில் அதிகளவில் பக்தர்கள் வருவர். இந்த பாதையில் பக்தர்களுக்கு செய்ய வேண்டிய வசதிகள் பற்றி, தேவசம் போர்டு உறுப்பினர் ராகவன், அதிகாரிகளுடன் சென்று ஆய்வு நடத்தினார். எண்ணுவது எப்படி? : சபரிமலையில், கோவில் முன்புறம் வைக்கப்பட்டுள்ள வட்ட வடிவ பாத்திரத்தில் போடப்படும் காணிக்கை, அதன் அடிப்பகுதி வழியாக கீழே செல்லும் போது, கன்வேயர் பெல்ட் மூலம் காணிக்கை எண்ணும் இடத்துக்கு செல்கிறது. வெளிநாட்டில் இருந்து இறக்குமதி செய்த, 30 லட்சம் ரூபாய் மதிப்பிலான இரண்டு இயந்திரங்கள், 15 லட்சம் ரூபாய் மதிப்பிலான இரண்டு இயந்திரங்கள் உட்பட, 14 இயந்திரங்கள், காணிக்கை எண்ண பயன்படுத்தப்படுகின்றன. ஊழியர்கள், நாணயங்களை மதிப்பு படி தரம் பிரித்தல், மடங்கியிருக்கும் நோட்டுகளை சரி செய்தல் போன்ற பணிகளை செய்கின்றனர். இவ்வாறு செய்த பின், ஆறு இயந்திரங்கள் மூலம் நோட்டுகள் எண்ணப்பட்டு, 100 நோட்டுகளாக கட்டப்படும். ஊழியர்கள் எண்ணி கட்டிய நோட்டுகள், பின், வெளிநாட்டு இயந்திரத்தின் மூலம் மீண்டும் எண்ணப்படும்.இந்த இயந்திரத்தில், கள்ள நோட்டுகள் தனியாக பிரிந்து விடும். இவ்வாறு எண்ணிய பின், வங்கி அதிகாரிகள், இயந்திரம் மூலம் மீண்டும் ஒரு முறை எண்ணி, எடுத்து செல்வர். நாணயங்கள், தனியாக எண்ணப்படும்.