மழைவேண்டி வத்திராயிருப்பு கிழவன் கோயிலில் சமாராதனை
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
28நவ 2017 11:11
வத்திராயிருப்பு: மழைவேண்டி வத்திராயிருப்பு கிழவன் கோயிலில் சமாராதனை வழிபாடு நடந்தது.வத்திராயிருப்பு மேற்குத்தொடர்ச்சி மலையடிவாரம் பிளவக்கல் அணைகள் மத்தியில் கிழவன்கோயில் உள்ளது. இங்கு கிழவன் வடிவில் எழுந்தருளி அருள்பாலிக்கும் தர்மசாஸ்தாவிற்கு ஒவ்வொரு ஆண்டும் மழைவேண்டி கார்த்திகை மாதம் சமாராதனை வழிபாடு நடத்தப்படும். இந்த ஆண்டுக்கான சமாராதனை விழா கணபதி ஹோமத்துடன் துவங்கியது. பக்தர்கள் வத்திராயிருப்பு ராமமூர்த்தி சுவாமி பஜனை மடத்திலிருந்து பூஜிக்கப்பட்ட பால்குடத்தை சுமந்தபடி நகர்வலம் வந்தனர். பின்னர் 18 கி.மீ., தொலைவில் உள்ள கிழவனார் கோயிலுக்கு பாதயாத்திரையாக பால்குடத்துடன் ஊர்வலம் சென்றனர். பால்குடம் கோயிலை வந்தடைந்ததும், பூரண கும்பம் வைத்து பூஜைகள் நடந்தது. பூஜிக்கப்பட்ட கும்பநீர் உட்பட சுவாமிக்கு 18 வகை அபிஷேகம் செய்யப்பட்டது. பின்னர் சாஸ்தா வடிவில்எழுந்தருளிய சுவாமிக்கு சிறப்பு பூஜைகள் நடந்தது. பூஜையின் முடிவில் பக்தர்களுக்கான அருள்வாக்கு நடந்தது. இதில் பக்தர்களின் வேண்டுதலுக்கு அருள்வாக்கு மூலம் பதிலளிக்கப்பட்டது. பின்னர் உச்சிகால பூஜைகள் செய்யப்பட்டு பக்தர்களுக்கு வனபோஜனம் நடந்தது. இந்து முப்பள்ளி தலைவர் அழகர், செயலாளர் சுதாகர், நிதிக்கமிட்டி தலைவர் நாராயணன், நிர்வாகிகள்ஏற்பாடு செய்தனர். சென்னை, மதுரை, கோவை உட்பட தமிழகத்தின் பல்வேறு ஊர்களிலிருந்தும் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர்.