பதிவு செய்த நாள்
28
நவ
2017
12:11
மடத்துக்குளம்: பலநுாறு ஆண்டுகளுக்கு முன், படையெடுப்புகளால் மக்கள் பாதிக்கப்பட்டது மட்டுமின்றி, கோவில்களும் சூறை யாடப்பட்டன. உடைக்கப்பட்ட கோவில் பாகங்கள் பல இடங்களில் கிடந்தன. கோவிலின் மற்ற பகுதிகளை மக்கள் பயன்படுத்த தவறினாலும், சில இடங்களில் காணப்பட்ட சிலைகளை எடுத்து சுத்தம் செய்து, வழிபட தொடங்கினர். இவை திறந்த வெளிகோவில் போல கிராமங்களில் உள்ளன.
மன்னர்கள் ஆட்சி காலத்தில் கடத்துார் கிராமம், ராஜராஜ நல்லுார் என அழைக்கப்பட்டது. அமராவதி ஆற்றங்கரையில் கடத்துாருக்கு அருகில் அமைந்திருந்த நஞ்சயபிள்ளைபுதுார் (தற்போதைய மடத்துக்குளம்), கண்ணாடிபுத்துார், கொமரலிங்கம், கொழுமம், கணியூர், சோழமாதேவி, கல்லாபுரம் ஆகிய ஊர்கள் சேர்த்து கரை வழிநாடுகள் என அழைக்கப்பட்டன. கரை வழிநாட்டில், 12ம் நுாற்றாண்டில் போர் நடந்தது. அப்போது, சோழர்கள் ஆட்சியில் நடந்த, இந்த போரில், பல்வேறு பாதிப்புகள் ஏற்பட்டது. இதில் சில கோவில்கள் சேதப்படுத்தப்பட்டன. சேதமடைந்த சிலைகள் போர்காலங்களில், பல இடங்களில் கிடந்தன. சிறிது காலத் துக்கு பின் போர் நிறுத்தம் ஏற்பட்ட நிலையில், போர் மனநிலையில் இருந்து மீண்ட மக்கள், சிலைகளை எடுத்து பராமரித்து வழிபட தொடங்கினர். இவை திறந்த வெளிகோவில் ஆனது. மடத்துக்குளம் அருகே கடத்துார் பகுதியின் பல இடங்களில் இதுப�ோல சிலைகள், கோவிலின் உடைந்த பகுதிகள் காடு மற்றும் ஊருக்கு ஒதுக்குபுறமான இடங்களில் தற் போதும் கிடக்கிறது. சில சிலைகளை மக்கள் வழிபடுகின்றனர். மக்கள் கூறுகையில், ‘கடத்துார் அர்ச்சுனேசுவரர் கோவிலுக்கு செல்லும் ரோட்டில், புதுாருக்கு அருகில், காட்டு பகுதியில் லிங்கேஸ்வரர் சிலை உள்ளது. இந்த இடத்தில், இந்த ஒருசிலை மட்டுமே உள்ளது. அருகில் கோவில் இருந்ததற்கான எந்த அடையாளமும் இல்லை. லிங்கத்தை பல தலைமுறையாகவழிபட்டு வருகிறோம். எண்ணெய் பூசி, திருநீறு, சந்தனம், குங்குமம் வைத்து வணங்குவோம். சிலர் மாலை நேரம் விளக்கு ஏற்றி வைப்பதும் உண்டு,’ என்றனர்.